
வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவமான "மெட்டா" நிறுவனத்தின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப் பட்டுள்ளார்.
வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் நிறுவங்களின் தாய் நிறுவனமான மெட்டா, சமீபத்தில் உலகளவில் பல முக்கிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது. அதே நேரத்தில் வாட்ஸாப்பின் இந்தியத் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா தளத்தின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் தம் பதவியை ராஜினாமா செய்தனர்.
அதை தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் புதிய இந்தியத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம் செய்யபட்டுள்ளார்.
சந்தியா தேவநாதன் 2000-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர். இத்துறியில் 22 வருடம் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் தென்கிழக்கு ஆசியாவில் தொழில்நுட்ப நிறுவனமான ஈ-காமர்ஸ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய சந்தியா, கடந்த 2016-ம் ஆண்டு மெட்டாவில் சேர்ந்தார். இப்போது அந்நிறுவனத்தின் இந்திய தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.
சந்தியா தேவநாதன் முறைப்படி 2023 ஜனவரி மாதம் பொறுப்பேற்று கொள்வார் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.