எலான் மஸ்கிற்கு கனடாவில் வெள்ளிச் சிலை!

எலோன் மஸ்க்
எலோன் மஸ்க்

அமெரிக்க பெரும் பணக்காரர் எலான் மஸ்கிற்கு கனடாவில் வெள்ளிச் சிலை நிறுவப்பட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கனடாவின் சிற்பக் கலைஞர்களான கெவின் மற்றும் மிச்செல் ஸ்டோன் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர். எலான் மஸ்கை கவுரவிக்கும் விதமாக இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 40 அடி உயரம் உள்ள இந்த சிலையின் மதிப்பு ரூ.5 கோடி எனக் கூற்ப்படுகிறது.

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் மற்றும்  ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டரை பல சர்ச்சைகளுக்கு இடையே வாங்கினார், உடனடியாக அதில் அதிரடி மாற்றங்கள் பல செய்தார். 

டிவிட்டரின் உயர் அதிகாரிகள் பலரை பணிநீக்கம் செய்தது, 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியை ரத்து செய்தது,  ஊழியர்கள் வாரத்தில் 40 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்பது போன்ற அதிரடி அறிவிப்புகளால் பணியாளர்கள் ஒருபுறம் கதிகலங்கி போய் இருக்க, மறுபுறம் அவரது ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து கொண்டாடி வருகின்றனர்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சாதனைகளை நினைவுகூரும் விதமாக இந்த வெள்ளி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் எலான் மஸ்கின் தலை, கிரிப்டோகரன்சியின் லோகோவை போன்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com