பிரபாகரன் குறித்த செய்திக்கு  மறுப்பு தெரிவித்த இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி!

பிரபாகரன் குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி!

விடுதலை புலி தலைவர் பிரபாகரன் 2009-ல் நடந்த போரில் கொல்லப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் அவர்களிடம் இருப்பதாகவும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடனும், மிக நலமுடனும் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது உலகையெங்கும் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் உண்டாகியுள்ளது. பழ.நெடுமாறன் பிரபாகரன் குறித்து பேசிய அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பழ. நெடுமாறனின் இந்த கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக விடுதலை புலி தலைவர் பிரபாகரன் 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி நடந்த இறுதிக் கட்ட போரில் கொல்லப்பட்டதாகவும், டிஎன்ஏ அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்கள் இருப்பதாகவும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பை முற்றிலுமாக மறுத்துள்ள பிரிகேடியர் ரவி, எதன் அடிப்படையில் பழ.நெடுமாறன் அந்த தகவலை சொன்னார் என்று எங்களுக்கு தெரியவில்லை. போரின் போதே பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் ஏற்கனவே நிரூபித்து விட்டோம்.

வேலு பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறியுள்ள தகவல் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக பதிலளிப்பார் என்றும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பழ. நெடுமாறன் விடுதலை புலிகள் தலைவர் வேலு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பேட்டியளித்த ஒரு மணி நேரத்தில் பிரிகேடியர் ரவி இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அது தொடர்பான புகைப்படங்களையும் தொலைக்காட்சியில் பகிர்ந்திருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com