இங்கிலாந்து மன்னராக சார்லஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இங்கிலாந்து மன்னராக சார்லஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ங்கிலாந்து நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் சென்ற ஆண்டு வயது மூப்பின் காரணமாக மறைந்தார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறினார். முறைப்படி மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6ம் தேதி பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிசூட்டு விழா, வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் உள்ள அபே தேவாலயத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த முடிசூட்டு விழாவின்போது பாரம்பரிய முறைப்படி மன்னர் சார்லஸ் தனது கையில் செங்கோல் மற்றும் தடி ஆகியவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். பின்னர் மூத்த மத குருமார்களால் புனிதப்படுத்தி ஆசிர்வதிக்கப்பட்டதும் புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லஸுக்கு அணிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனை பால்கனியில் இருந்து மன்னர் சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதே நாளில் கமீலா பார்க்கரும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் மற்றும் மற்றொரு இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் உள்ள முக்கியமான பிரபலங்கள் சுமார் இரண்டாயிம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் அரசின் பாரம்பரிய விழா என்பதால் லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது. முடிசூட்டு விழாவின்போது லண்டன் வீதிகளில் சிறப்பு விருந்து மற்றும் கச்சேரிகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இங்கிலாந்து மன்னராக முடிசூடத் தயாராகிவரும் சார்லஸுக்கு செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் எதிர்ப்பு வலுத்து வருகிறது! அந்த வகையில் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள், ‘நீங்கள் எங்களுடைய மன்னர் அல்ல’ என்று முழக்கமிட்டனர். இதனால் மன்னர் சார்லஸ் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அண்மையில் கூட சார்லஸ் மீது முட்டை வீச்சு சம்பவம் ஒன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com