சுந்தர் பிச்சையின் சென்னை வீட்டை கண் கலங்கியபடி விற்ற தந்தை!

சுந்தர் பிச்சையின் சென்னை வீட்டை கண் கலங்கியபடி விற்ற தந்தை!

கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் சுந்தர் பிச்சை. இந்தியாவின் தமிழ் மாநிலத்தின் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், தலைநகர் சென்னையில் தான் படித்தது வளர்ந்தது எல்லாம். சென்னை, அசோக் நகரில் இருக்கும் இவரது வீட்டில் இருந்துதான் தனது இளமையையும் பள்ளிப் பருவத்தைக் கழித்தார் சுந்தர் பிச்சை. தம்முடைய கல்வி மேற்படிப்பை கரக்பூர் ஐஐடி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.

அதன் பிறகு, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சாப்ட்வேர் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார் சுந்தர் பிச்சை. அதனைத் தொடர்ந்து கூகுல் நிறுவத்தில் பல பொறுப்புகளை வகித்த அவர், தற்போது அதே நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பு வகித்து வருகிறார். உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்குபவர்களில் ஒருவரான சுந்தர் பிச்சை, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பிரம்மாண்டமான ஆடம்பர பங்களா ஒன்றில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சை தான் முதன் முதலில் சென்னை அசோக் நகரில் வாங்கிய தனது வீட்டை விற்று விடலாம் என்று முடிவு செய்திருந்தார். அந்த வீட்டை நடிகரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் என்பவர் வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ரெகுநாத பிச்சை அமெரிக்காவில் இருந்ததால் இந்த சொத்து ஆவணங்களை உரிய முறையில் ஒப்படைக்க சில மாதங்கள் ஆகியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் சென்னைக்கு வந்த ரெகுநாத பிச்சை தனது மகன் சுந்தர் பிச்சையின் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்து சரியான ஆவணங்களையும், வரிகளையும் செலுத்தி தான் முதன்முதலாக சென்னையில் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்த வீட்டை கண்ணீர் மல்க மணிகண்டனுக்கு விற்று இருக்கிறார். ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூருக்கு ஈடாகுமா?‘ என்பது அனைவருக்கும் பொருந்தும்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com