பூமியைவிட 10 மடங்கு பெரிய சூப்பர் எர்த்: நாசா கண்டுபிடிப்பு!

நாசா
நாசா

பூமியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு பெரியதான சூப்பர் எர்த் ஒன்று, பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது.

பூமியை விட பிரமாண்டமான இந்த புதிய சூப்பர் எர்த்தை கடந்த மாதம் (நவம்பர் - 8ம் தேதி அன்று ) நாசா கண்டறிந்து இந்த கோளுக்கு TOI-1075b என்று பெயரிடப் பட்டுள்ளதாகவும், இந்த புறக்கோளின் ஆரம், புவியை விட 1.8 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டதாவது;

பூமியை விட 10 மடங்கு பெரியதான இந்த  TOI-1075b சூப்பர் எர்த்தில் ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்கள் அடங்கிய அடர்த்தியான வளிமண்டலம் காணப்படுகிறது. இந்த புதிய கோளுக்கு மனிதர்கள் சென்றால் மூன்று மடங்கு எடை அதிகரித்து காணப்படுவார்கள்.  இது பூமியில் இருந்து 200ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும் இந்த கோளானது பாறைகள் மற்றும் திடப்பொருளால் ஆனதாகக் காணப்படுகிறது.

 -இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com