ரிசரால்டா மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு! பேருந்து மண்ணோடு புதைந்து 34 பேர் பலி !

ரிசரால்டா மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு! பேருந்து மண்ணோடு  புதைந்து 34 பேர் பலி !

ரிசரால்டா மாவட்டத்தில் உள்ள பியூப்லோ ரிக்கோ மற்றும் சான்டா சிசிலியா கிராமங்களுக்கு இடையே சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

மத்திய கொலம்பியாவில் கடுமையான மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று புதைந்து 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு படை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மண்ணை தோண்டி எடுக்க தொடங்கினர்.

கொலம்பியா செய்தி அறிக்கையின்படி, ரிசரால்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பியூப்லோ ரிகோ நகரில், நிலச்சரிவினால் நெடுஞ்சாலை ஒன்றில் மண் குவியல் சரிந்து சாலையை மூடியுள்ளது. இந்த நிலச்சரிவு ஏற்படும் போது அந்த சாலையில் சென்று கொண்டிருந்த 33 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து, இரண்டு நபர்களை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆறு பேரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றும் சிக்கிக்கொண்டது. இந்த மூன்று வாகனங்கள் மீதும் சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு மண் குவிந்துள்ளது.

உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், 70 க்கும் மேற்பட்ட தேடல்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பல கருவிகளைப் பயன்படுத்தினர், 41 நபர்கள் சிக்கிருந்த நிலையில் , 24 மணி நேரத்திற்குப் பிறகு, 9 பேரை உயிருடன் மீட்டிள்ளனர். மேலும் 34 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 8 சிறுவர்களும் அடங்குவதாக தேசிய பேரிடர் இடர் முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் பல மணி நேரம் போராடி 9 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலான நிலையில் இந்த மூவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com