எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ப்ளூ டிக் பெறும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைத் தன் வசப்படுத்தியதிலிருந்து தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவர் ஆவார்.

எலான் மஸ்க்கிடம் ட்விட்டர் வந்த பிறகு முதல் கட்ட நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ வாக பதவி வகித்து வந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பணி நீக்கம் செய்தார். ட்விட்டரில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் என ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் ஏறக்குறைய 50% பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளின் பணி நீக்கம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆட்குறைப்பு நடவடிக்கை அதனை தொடந்து ப்ளூ டிக் விவகாரமும் என அனைத்துமே பேசுப்பொருளாக மாறியிருந்தது.

அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகளைக் வைத்திருக்கும் ப்ளூ டிக் பயனாளர்களிடம் இருந்து மாதம்தோறும் 19.99 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1,600 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பின் 8 அமெரிக்க டாலர் மட்டும் செலுத்தி ப்ளூ டிக்கை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பயனர்கள் ப்ளூ டிக்கை பெறுவதற்கு மாதம் ரூ.719 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தக் கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும். அவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி முதல் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வெரிஃபைட் அக்கவுண்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்த மஸ்க் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மஸ்க் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் நவம்பர் 29-ஆம் தேதி முதல் இந்த ப்ளூ டிக் பெறும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் இம்முறை இத்திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com