நாடாளுமன்றத்தில் காதலை சொன்ன எம்.பி... உடனே 'Yes' சொன்ன பெண்மணி! தரமான சம்பவ வீடியோ!
நாடாளுமன்ற உரையின் போது, தனது காதலை வெளிப்படுத்திய எம்.பி. நாதன் லாம்பர்ட்டுக்கு 2 குழந்தைகள் இருந்த நிலையிலும் அவரது காதலை ஏற்றுக் கொண்டார் நோவா எர்லிச். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. நாதன் லாம்பர்ட். இவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அந்த உரையின் நடுவே, யாரும் எதிரபாரதவிதமாக, சக உறுப்பினரான நோவா எர்லிச் என்பவரிடம், காதலின் வெளிப்பாடாக, 'நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், 'தற்சமயம் கையில் மோதிரம் எடுத்து வரவில்லை. பின்னிரவு அதை தருவதாகவும் எம்.பி. அன்பை வெளிப்படுத்தியுள்ளார். உடனே, நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவருமே கைதட்டி கரவொலி எழுப்பி எம்.பி.யின் காதலை உற்சாகப்படுத்தினர்.
எம்.பி. லாம்பர்டினுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், நோவா எர்லிச் அவரது காதலை ஏற்றுக் கொண்டு திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்துள்ளார். தற்சமயம் இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.