சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ...பள்ளிகள் மூடல்!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ...பள்ளிகள் மூடல்!

கடந்த சில மாதங்களாக சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மற்ற உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில் சீனா தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களை சாதாரணமாக நடமாட அனுமதித்தது. அதன் விளைவாக சீனாவில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக உருமாறிய கொரோனா தாக்கம் குழந்தைகளிடையே அதிகமாக பரவி வருகிறது. நோய் தொற்று தொடங்கிய சீனாவில் நோய் பரவல் என்பது இன்றும் தொடர்ந்து வருவது கவலை தருகிறது.

கடந்த வார இறுதியில் வர்த்தக மையமான ஹாங்ஜோவ் நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஒரே வகுப்பறையில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா
கொரோனா

இதனால் உள்ளூர் கல்வி அதிகாரிகள் திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர். இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பல நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

சீனாவின் உகான் மாகாணத்தில் 2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்தம்பிக்க வைத்து கொண்டிருக்கிறது . ஊரடங்கு, சமூக இடைவெளி, தனிமைப்படுத்துதல் என்று பல வழிமுறைகளை கையாண்டு உலக நாடுகள் கொரோனாவில் இருந்து வெளியே வந்துள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் இறுதி முதல் சீனாவில் கரோனா பரவல் வேகமெடுத்தது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சீனாவின் நிலைமை பிற உலக நாடுகளை மறுபடியும் அச்சம் கொள்ள வைத்தது. மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ, பொருளாதாரம் சரியுமோ என்பன போன்ற கேள்விகள் எழுந்து வந்தன. அச்சம் கருதி, சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனைகள் அவசியம் என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com