கழிவறை இருக்கை பாக்டீரியா கிருமியை விடவா தண்ணீர் பாட்டலில் கிருமிகள் அதிகம் ... ஆய்வில் அதிர்ச்சி !

கழிவறை இருக்கை பாக்டீரியா கிருமியை விடவா தண்ணீர் பாட்டலில் கிருமிகள் அதிகம் ...   ஆய்வில் அதிர்ச்சி !

நாம் அன்றாடம் அதிகம் பயன் படுத்தும் கேன் வாட்டர்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் குறித்து பல்வேறு தகவல்கள் மற்றும் சர்ச்சைகள் அதிக அளவில் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் பல தகவல்கள் நமக்கு கிலி ஏற்படுத்துபவையாக இருப்பதும் உண்டு. அந்த வகையில் நாம் தினமும் தண்ணீர் குடிக்கும் பாட்டல்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் இருக்கும் பாக்ட்டீரியாக்கள் மற்றும் நுண்கிருமிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள வாட்டர் பில்டர் குரு டாட் காம் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு தண்ணீர் பாட்டில்களின் பல்வேறு பகுதிகளை சேகரித்து ஆய்வை மேற்கொண்டது. தண்ணீர் பாட்டில்களில் பல வகையான மூடிகளை கொண்ட பாட்டில்கள் ஒவ்வொன்றையும் மூன்று முறை பரிசோதித்ததில் பேசிலஸ் என்ற பாக்டீரியா அதிகம் இருப்பதாக கண்டறிந்தனர்.

சராசரியாக கழிவறை இருக்கையில் இருக்கும் பாக்டீயா கிருமிகளை விட 40 ஆயிரம் மடங்கு பாக்டீரியா கிருமிகள் மறுமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களில் இருக்கின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த பாக்டீரியா கிருமிகள் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும். இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். தண்ணீர் பாட்டில்களில் கிச்சன் சிங்கை விட 2 மடங்கு கிருமிகளும் கம்ப்யூட்டர் மவுஸை விட நான்கு மடங்கு பாக்டீரியாக்காளும் செல்லப் பிராணிகள் குடிக்கும் கிண்ணத்தை விட 14 மடங்கு பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கின்றனர்.

ஆய்வு செய்யப்பட்ட மற்ற தண்ணீர் பாட்டில்களை மறுமுறை பயன்படுத்தப்படும் பாட்டில்களை உபயோக்கிக்கையில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சூடான சோப்பு நீரில் கழுவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நுண்ணயிரியலாளர் டாக்டர் சைமன் கிளார்க் தெரிவித்த டஹ்கவல் நமக்கு ஆறுதலாக இருக்கிறது.“ பாட்டில்கள் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும் அது ஆபத்தானது இல்லை. மேலும் இந்த தண்ணீர் பாட்டிலை பயன்படுத்தியதால் ஒரு மனிதன் நோய் வாய்பட்டதாக நான் கேள்விபட்டதே இல்லை என தெரிவித்துள்ளார். இந்த செய்தி நிச்சயம் நமக்கு நிம்மதியை தருகிறது தானே !

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com