"ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சரியமானவர்'' என்று எலான் மஸ்க் பகிர்ந்த புகைப்படம்!
கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், CEO நாற்காலியில் அவரது ஷிபா இனு நாய் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், பல்வேறு சிக்கல்களுக்குப்பிற்கு கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். அப்போதிருந்தே அவர் ட்விட்டர் நிர்வாகத்தில் பல்வேறு விதமான அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பல்வேறு விமர்சனங்களைக்கிடையே ட்விட்டரின் தலைமை நிர்வாகி பராக் அகர்வால் உட்பட, கிட்டத்தட்ட ட்விட்டரின் பாதி பணியாளர்களையும் நீக்கினார்.
இந்நிலையில், கோடீஸ்வரரான எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில், "The new CEO of Twitter is amazing" என்று பதிவிட்டு, தனது செல்ல நாயான ஃப்ளோக்கியை உலகிற்கு அறிமுகப்படுத்தியபடி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
எலான் மஸ்க் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம், CEO நாற்காலியில் அவரது ஷிபா இனு நாய் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. செல்ல நாய் ட்விட்டர் பிராண்டட் கருப்பு டி-ஷர்ட் அணிந்தபடி, அதில் CEO என்று எழுதப்பட்டும், அந்த நாய்க்குட்டியின் முன்னால் ஓரிரு ஆவணங்களும் சிறிய மடிக்கணினியும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
எலன் மஸ்க்கே அந்த புகைப்படத்தைத் தொடர்ந்து, ஒரு ட்வீட்டில், "மற்ற நபரை விட மிகவும் சிறந்தவர்!" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவைத் தொடர்ந்து ட்விட்டரில் பலரிடம் இது எதிர்வினைகளைத் தூண்டியதோடு, பலரும் ரீ-ட்வீட் செய்தும் வருகின்றனர்.