மெட்டாவின் வாட்ஸ் அப் மற்றும் மெட்டா மேலும் ஒரு நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட இந்திய அதிகாரிகள் ராஜினாமா செய்திருக்கின்றனர்
சமீபகாலமாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பல அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதனால் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நீக்கம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் இரண்டு உயர்மட்ட இந்திய அதிகாரிகள் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் பரவியுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரில் அதிரடி ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த செய்திகளின் பரபரப்பு குறைவதற்குள் பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து கடந்த வாரம் 'மெட்டா'வும் 11 ஆயிரத்துக்கும் (13 சதவிகிதத்துக்கும்) மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்திருந்தார்.
தற்போது, மெட்டா நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட இந்தியா அதிகாரிகளான இந்தியாவின் வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா இந்தியாவின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் ராஜினாமா செய்து மெட்டாவிலிருந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து ராஜீவ் அகர்வாலுக்குப் பதிலாக ஷிவ்நாத் துக்ரால் இந்தியாவின் வாட்ஸ்அப் பொதுக் கொள்கையின் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கம் , ராஜினாமா போன்றவை தற்போது தினந்தோறும் செய்திகளில் அடிபடுகிறது . இது குறித்து பொருளாதார வல்லுநர்கள் தரப்பில் பல்வேறு தகவல்கள் அலசி ஆராயப்பட்டு வருகிறது.