உக்ரைன் வெளியிட்ட ஓராண்டு போர் நினைவினை கூறும் புதிய கரன்சி!

ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்ய உக்ரைன் போர் துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து உக்ரைன் புதிய கரன்சி நோட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் ரஷ்யா தொடர்ந்து கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் போர் துவங்கி ஒரு ஆண்டு முழுமையாக முடிந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மத்தியில் பதற்றமான சூழ்நிலை தொடரும் வேளையில் அமெரிக்க அரசு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மத்திய வங்கியான National Bank of Ukraine நேற்று ரஷ்யாவின் படையெடுப்பின் ஒரு வருடத்தை நினைவு கூரும் வகையில் புதிய கரன்சி நோட்டை அறிமுகப்படுத்தியது. ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் மற்றும் உக்ரைனின் வெற்றியை சித்தரிக்கும் குறிப்புகளைக் கொண்ட புதிய கரன்சி நோட்டுகளை அடுத்தடுத்து வெளியிட உக்ரைன் மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

ஹ்ரிவ்னியா என்பது உக்ரைன் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாகும், ஒரு ஹ்ரிவ்னியா 2.25 ரூபாய்க்குச் சமம், இதேபோல் அமெரிக்கா டாலருக்கு எதிரான மதிப்பில் 26.76 ஹ்ரிவ்னியா. தற்போது உக்ரைன் ஒரு ஆண்டுப் போர் காலத்தை நினைவுக்கூறும் வகையில் 20 ஹ்ரிவ்னியா நோட்டில் புதிய புகைப்படங்கள் கொண்டு வெளியிடப்பட்டு உள்ளது.

உக்ரைன் நாட்டின் மத்திய வங்கியான National Bank of Ukraine வியாழன் வெளியிட்ட 20-ஹ்ரிவ்னியா நோட்டின் ஒரு பக்கம் மூன்று வீரர்கள் அந்நாட்டு தேசிய கொடியை உயர்த்தும் படம் கொண்டு உள்ளது. மறுபுறம் இரண்டு கைகளில் டேப்பால் கட்டப்பட்டிருக்கும் படம் உள்ளது, இது உக்ரைனில் ரஷ்யப் படைகள் போர்க்குற்றங்கள் செய்ததும், இதன் பின் ரஷ்ய படைகள் சரண் அடைந்தை குறிப்பிடுவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்ய போரின் ஒரு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஒரு வருடத்தின் உணர்வுகள், வடிவங்கள் மற்றும் சின்னச் சின்ன விஷயங்களைச் சித்தரிக்கும் நினைவுகளைப் பணத்தாளில் அச்சிட்டு வெளியிட முடிவு செய்தோம் என்று உக்ரைன் நேஷனல் பேங் கவர்னர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com