உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர இயலுமா?...

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர இயலுமா?...
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படித்து கொண்டிருந்த இந்திய மாணவர்கள் 20,000 பேர் தாயகம் திரும்பினர். தற்போது வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.

இவர்கள் இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு, ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியுறவுத்துறைக்கான மக்களவை குழு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. 


இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில்  வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கு கடந்த 5-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் விரிவான பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்திற்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். 

இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய அரசு, உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மருத்துவ மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர ஏற்பாடுகளை செய்ய இயலாது, அவ்வாறு இந்தியாவில் படிப்பினை தொடர தளர்வுகளை செய்தால் அது ஏற்கனவே இந்தியாவில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் தரத்தை பாதிக்கும் எனவும், குறிப்பாக வெளிநாடுகளில் படித்த இந்திய மாணவர்கள் அவர்களின் படிப்பை இடையில் இந்திய பல்கலைக்கழகங்களில் தொடர வழிவகை செய்யும் முறை "தேசிய மருத்துவ சட்டத்தில்" வழிவகை செய்யப்படவில்லை எனவும், மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com