அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல்; ஆளும் ஜனநாயக கட்சி தோல்வி!

நான்சி பெலோசி
நான்சி பெலோசி

அமெரிக்காவில் நாடாளுமன்ற கீழ்சபைத் தேர்தலில் ஆளும்கட்சியான  ஜனநாயக கட்சி பெரும்பான்மை இழந்தது. அந்த வகையில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி 218 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

 இத்தேர்தலில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையை எதிர்கட்சியான குடியரசுக் கட்சி கைப்பற்றிய நிலையில், தற்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ம் தேதி தேர்தல் நடந்தது.

2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

 இந்நிலையில் கடந்த 8-ம் தேதி நடந்த தேர்தலில் எதிர்க்கடசியான குடியரசு கட்சி 218 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது.  இதையடுத்து சபாநாயகர் நான்சி பெலோசி, பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் பதவி மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளார்.

 செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நான்சி பெலோசி, "அமெரிக்க ஜனநாயகக் கட்சியை தலைமை தாங்க அடுத்த தலைமுறைக்கு நேரம் வந்துவிட்டது.  நான் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து சேவை செய்வேன்’’ என்று தெரிவித்தார்.  

 இதனை தொடர்ந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவிக்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com