இன்று அமெரிக்க செனட் சபை தேர்தல்; களமிறங்கும் இந்திய வம்சாவளியினர் 5 பேர்!

அமெரிக்க செனட் சபை தேர்தல்
அமெரிக்க செனட் சபை தேர்தல்

அமெரிக்காவில் இன்று நடைபெறும் செனட் சபை  தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 அமெரிக்காவில் இன்று நாடாளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் காலியாக உள்ள 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அங்கு 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் இன்றைய தேர்தலின் முடிவுகள் பிரதிபலிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இவர்களில் 4 பேர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், தங்களின் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக மீண்டும் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.

அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் ஆகிய 4 பேரும் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள்.

57 வயதான அமி பெரா பிரதிநிதிகள் சபைக்கு 6வது முறையாகவும், ரோ கண்ணா (46), ராஜா கிருஷ்ணமூர்த்தி (49) மற்றும் பிரமிளா ஜெயபால் (57) ஆகியோர் 4-வது முறையாகவும் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பதும், பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே இந்திய வம்சாவளி பெண் என்பதும் குறிப்பிடத் தக்கது.

 இவர்கள் 4 பேரையும் தவிர்த்து மிச்சிகன் மாகாண சட்டமன்ற உறுப்பினராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீ தானேதர் முதன்முறையாக பிரதிநிதிகள் சபைக்கு ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

இவர் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் 5-வது இந்தியராக இருப்பார் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com