சானியா மிர்சா - வருண் தவான்
சானியா மிர்சா - வருண் தவான்

சானியா மிர்சாவுக்கு ஆப்பிள் கொடுத்து திட்டு வாங்கினேன்: வருண் தவான்!

பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெடியா’  என்கிற திரைப்படம் உலகத் திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது. தமிழிலும் இந்த படம் ஓநாய் என்கிற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுள்ள வருண் தவான், ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

‘’சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக, முதன்முதலாக ஒரு விளம்பர படத்தில் நடித்ததற்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது. அப்போது சானியா மிர்சா எனக்கு குளோஸ் பிரெண்ட்ணவர் எனக்கு போன் செய்து ஆப்பிள் வாங்கி வருமாறு கூறினார்.

நானும் ஆப்பிளை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்கு போனேன். வீட்டுக் கதவைத் திறந்த அவரது அம்மா, ஆப்பிளும் கையுமாக என்னைக் கன்டு ‘’என் மகள் ஆப்பிள் சாப்பிட மாட்டாளே, யாருக்காக வாங்கி வந்தாய்?” என்று சத்தம் போட்டார். நல்லவேளையாக அங்கு வந்த சானியா மிர்சா, ‘’நான்தான் வாங்கி வரச்சொன்னேன்’’ என கூறிய பின்னரே அவரது அம்மா சமாதானம் அடைந்தார்’’ என்று கூறினார் வருண் தவான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பரபரப்பான செய்திகள் வெளியான நிலையில், சானியாவுக்கும் தனக்குமான நட்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார் வருண் தவான். 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com