வெளிநாட்டு வேலை வேண்டுமா ? கனடாவில் தேடுங்க....!

வெளிநாட்டு வேலை வேண்டுமா ? கனடாவில் தேடுங்க....!

சமீபத்தில் கனடாவிற்கு நிறைய பேர் தேவை என அந்நாட்டின் அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்திருந்தார். கனடாவில் 7 பேரில் ஒருவர் 55, 64 வயதிற்குள் உள்ளனர். இந்த கால கட்டத்தில் கனடாவில் வேலை வாய்ப்பு என்பது இதுவரை இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. அதேசமயம் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால், செலவு அதிகரிக்கும். அது வணிகத்தில் பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தும் என்பதால், விசா நடவடிக்கையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது கனடா அரசு.

மொத்தத்தில் வெளி நாடுகளில் வேலை பார்க்க திட்டமிடும் இளைஞர்களுக்கு கனடா சரியான நல்வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கனடா அரசு விசா நடவடிக்கையில் பல்வேறு தளர்வு அளிக்க முடிவு செய்துள்ள நிலையில், கனடாவில் தனது குடியேற்ற இலக்குகளையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

கனடாவில் கொட்டி கிடக்கிறது வேலை வாய்ப்புகள். நிதித்துறை, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட், வாடகை மற்றும் குத்தகை, உற்பத்தி துறை, தகவல் தொழில் நுட்பம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு துறை என பலவற்றிலும் அதிகளவில் பணியமர்த்தல் என்பது அதிகரித்துள்ளது. நிதித்துறை, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட், வாடகை மற்றும் குத்தகை உள்ளிட்ட துறைகளில், கடந்த நவம்பரில் 21,000 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 11.2% கனேடியர்கள் சில்லறை வர்த்தக துறைகளில் வேலையினை பெற்றுள்ளனர்.

கடந்த அக்டோபர் 2022ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில், கனடா முழுவதும் கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்பு 1.6% குறைந்துள்ளது. இதே மொத்த மற்றும் சில்லறை துறையில் 0.8% சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த மே மாதத்தில் இருந்து மொத்தம் 4.4 சரிவினைக் கண்டுள்ளது.

உற்பத்தி துறையில் பணியமர்த்தல் ஆனது 1.1% அதிகரித்துள்ளது. கனடாவின் முக்கிய பகுதிகளான ஆல்பர்ட்டாவில் வேலை வாய்ப்பு என்பது 4.7% அதிகரித்துள்ளது. இதே கியூபெக்-கில் 10,000 பேரை சேர்த்துள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் கட்டுமானத் துறை மற்றும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக துறையில் கடும் சரிவினைக் கண்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com