என்னது! ஜப்பானில் ஒரு முட்டையின் விலை இவ்வளவா?

என்னது! ஜப்பானில் ஒரு முட்டையின் விலை இவ்வளவா?

றவைக் காய்ச்சல் காரணமாக ஜப்பானில் முட்டையின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே ஜப்பான் நாட்டில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவத் தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த மாதம் வரை சுமார் 17 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் பறவைக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளது. இந்த நோய் மற்ற கோழிகளுக்கும் பரவாமல் இருக்க அந்நாட்டு சுகாதாரத்துறை, நோய் பாதித்த கோழிகளை ஆழமாக பள்ளம் தோண்டி புதைக்க வேண்டுமென உத்தர விட்டுள்ளது.  இதனால், மேலும் பறவைகள் இறந்தால் புதைப்பதற்கு இடமில்லை என்ற நிலையும் உருவாக்கியுள்ளது. 

இதுவரை இல்லாத அளவிற்கு அங்கே பறவைக் காய்ச்சல் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அமெரிக்கா ஐரோப்பா, ஆசியா போன்ற இடங்களிலும் வேகமாக பரவுவதால், இதன் எதிரொலியாக முட்டையின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஜப்பானில் இருக்கும் மெக்னால்ட் போன்ற நிறுவனங்களில் முட்டையை வைத்து செய்யப்படும் உணவு வகைகள் கூட செய்யப்படுவதில்லை. இறந்த கோழிகளில் 90% முட்டையிடும் கோழிகள் என்பதால், முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஒரு முட்டை 335 யென்னுக்கு விற்பனையாகிறது. ஒரு யென் என்பது இந்திய மதிப்பு படி 61 பைசாவாகும். அப்படியானால் 335 யென் என்பது 204 ரூபாய். அதாவது நம்மூரில் கிடைக்கும் ஒரு கிலோ கோழியின் விலைக்கு நிகராக, அங்கே தற்போது ஒரு முட்டையின் விலை விற்பனையாகிறது.

தினசரி விலையேற்றத்தை சந்திக்கும் ஜப்பானில் தற்போது ஒரு முட்டையின் விலை 213 ரூபாய் ஆகும். இதனால் ஆஃப் பாயில், ஆம்லெட் உள்ளிட்ட முட்டையைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவு வகைகளை மக்கள் தவிர்த்து வருகிறார்கள். இதுபோன்ற விலை உயர்வு 1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். இதனால் அங்கே உள்ள பல ஹோட்டல்களிலும் முட்டை சார்ந்த உணவுகள் எதுவும் தயார் செய்யப்படுவதில்லை. அப்படியே யாராவது வாங்கி சமைத்தாலும், அதை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவதில்லையாம். 

விலை உயர்வு ஒரு பக்கம் இருக்க, ஒருவேளை அதை வாங்கி சாப்பிட்டால் அதில் ஏதாவது பறவைக் காய்ச்சல் கிருமி இருக்குமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். இதனால் அங்கு பெரும்பாலானவர்கள் சிக்கன் உணவிலிருந்து மீன் உணவிற்கு மாறிவிட்டார்கள். 213 ரூபாய் கொடுத்து சிக்கன் வாங்குவதற்கு பதில், மீன் வகைகளை வாங்கி வயிறார சாப்பிடும் மனநிலைக்கு ஜப்பானியர்கள் வந்துவிட்டார்கள். 

இந்த நிலையில், தற்போது கையிருப்பில் இருக்கும் முட்டைகளை வைத்து, குஞ்சு பொரிக்க வைத்தால் கூட குஞ்சுகளுக்கு ப்ளு வராமல் தடுக்க முடியுமா என்பது பற்றி சுகாதாரத்துறை யோசனையில் இறங்கியுள்ளது. நமது ஊரில் எப்போது சீசனுக்கு ஏற்றவாறு தக்காளி வெங்காயம் விலை உயருமோ அதேபோலத்தான் ஜப்பானில் தற்போது முட்டை விலை உயர்ந்துள்ளது. 

இதனால், குறைந்தது 6 மாதத்திற்காவது முட்டையை வைத்து செய்யப்படும் உணவுகளைத் தவிர்க்க, மக்களும் ஹோட்டல் நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com