சீனாவிலிருந்து தப்பித்த அலிபாபா இணை நிறுவனர் ஜாக் மா எங்கே?

சீனாவிலிருந்து தப்பித்த அலிபாபா இணை நிறுவனர் ஜாக் மா எங்கே?

சீனாவின் பெரும் பணக்கார்ர்களில் ஒருவர் ஜாக் மா. அவரை சில நாட்களாகக் காணவில்லை.

ஜாக் மா பெரிய வர்த்தகர், சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் இணை நிறுவனர். அவரது சொத்து மதிப்பு 41 பில்லியன் டாலர். அவர் பெரும் பணக்காரர் மட்டுமல்ல, அவர் மக்களிடையே பிரபலமானவர். சீனாவில் அவரை ஒரு ஹூரோவாகவும் சக்திவாய்ந்த நபராகவும் பலரும் பார்க்கின்றனர்.

இந்த நிலையில் அவரை இரண்டு மாதமாக காணவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. ஜாக் மா எங்கே என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்தது.

இதனிடையே அவர் கடந்த ஒருமாத காலமாக ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் ஒரு ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளதாக சீனாவின் இகாய் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. எனினும் இதற்கான ஆதாரத்தைக் கூற அந்த நிறுவனம் மறுத்துவிட்டது.

அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனரான ஜாக் மா அவ்வப்போது டுவிட்டரில் தலைகாட்டினாலும் ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் அதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.

ஜாக் மா சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர் என்ற போதிலும் கடந்த 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்தே அவர், வெளிநாடுகளிலேயே இருந்து வருகிறார். முதலில் ஜப்பானில் டோக்கியோவில் ஒரு ஹோட்டலில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அவர், பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றதாகவும் பின்னர் கடந்த மாதம் நிதி மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளை சந்திக்கும் பொருட்டு அவர் ஹாங்காங் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் நடைபெற்ற வர்த்தகர்கள் மாநாட்டில் ஜாக் மா, சீன வங்கிகளின் செயல்பாட்டையும், நிதி நடைமுறைகளையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. நிதிகளை கையாள்வதில் சீனா, பழைமையான நடமுறைகளை கைவிட்டு நவீன முறைக்கு மாற வேண்டும் என்றும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இவை சீன ஆட்சியாளர்களுக்கு பிடிக்காமல் போகவே கிடுக்கிப்பிடி போட்டதால் அவர், சீனாவுக்கு வெளியிலேயே தங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com