கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பு

டுவிட்டர் தலைவர் எலன் மஸ்க் விலகலா?

எலன் மஸ்க் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் இதுவரை வெளிவந்த முடிவுகளைப் பார்த்தால் டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரி எலன் மஸ்க் பதவி விலகி விடுவார் போலத் தெரிகிறது.

"சமூக ஊடக தளத்தின் தலைவர் பதவியிலிருந்து நான் விலக வேண்டுமா?" என்று பயனர்களிடம் கருத்து கேட்டு டுட் செய்துள்ள அவர், கருத்துக்கணிப்பின் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளார். "ஆம்.. நீங்கள் பதவி விலக வேண்டும்" என்ற கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், “உங்கள் விருப்பத்தில் கவனமாக இருங்கள். நீங்கள் அதை அடைவீர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டுவி்ட்டரில் முக்கிய  கொள்கை மாற்றங்கள் செய்வது குறித்தும் இனிமேல் கருத்துக்கணிப்பு நடத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே மஸ்க், டுவிட்டர் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஒரு சிலரும், வேண்டாம் என்று வேறு சிலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரோட் ஐலண்ட் நாடாளுமன்ற பிரதிநிதியான டேவிட் மொராலஸ், “ எலன், இந்த விஷயத்தில் இன்னும் கருத்துத் தெரிவிக்காமல் உள்ளார். நீங்கள் தயுவு செய்து டுவிட்டர் தலைமைப் பதவியிலிருந்து விலகி விடுங்கள். நான் பலரிடம் பேசியபோது உங்கள் அறிக்கைகளும் செயல்பாடுகளும் பலருக்கும் பிடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே நீங்கள் விலகி விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எலன் மஸ்க்
எலன் மஸ்க்

இதனிடையே சிலர் அவரை டுவிட்டரிலிருந்து விலகி விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். லிஸ் வீலர் என்ற அமெரிக்கர் கருத்துத் தெரிவிக்கையில், “நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள். குழப்பமான நிலையை சரி செய்ய விரும்புகிறீர்கள்.

மக்கள் மனதை கட்டுப்படுத்தி வரும் இடதுசாரிகளின் செயல்பாடுகளை வெளிப்படுத்த நீங்கள் தேவை. அரசியல்வாதிகள் உள்பட பலர் இதை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். எனவே நீங்கள் பதவியில் தொடர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

(பேஸ்ஃபுக்), இன்ஸ்டாகிராம், மாஸ்டோடன் உள்ளிட்ட பிற குறிப்பிட்ட ஊடக தளங்களில் பிற கணக்குகளை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்படும் கணக்குகளை தடை செய்வதாக டுவிட்டர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கருத்துக்கணிப்பு வந்துள்ளது.

எங்களின் பயனர்களில் பலர் பிற சமூக ஊடக தளங்களில் உள்ளதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால், டுவிட்டரில் சில சமூக ஊடகங்களை இலவசமாக விளம்பரப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று டுவிட்டர் தெரிவித்திருந்தது.

சமீபத்தில் டுவிட்டரிலிருந்து பத்திரிகையாளர்களை எலன் மஸ்க் சஸ்பெண்ட் செய்திருந்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செகரட்டரி ஜெனரல் அன்டோனியோ குட்டரெஸ் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், இது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என்று சுட்டிக்காட்டியதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை டுவிட்டரிலிருந்து சில பத்திரிகையாளர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டன. இதற்கு பலத்த கண்டனக் குரல்கள் எழவே அவர்களின் கணக்குகளை எலன் மஸ்க் உயிர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com