நெருப்புடா!! களமிறங்கிய த்ரெட்ஸ்.. 5 நாட்களில் 10 கோடி பயனர்கள்!

த்ரெட்ஸ்
த்ரெட்ஸ்

த்ரெட்ஸ் செயலி களமிறங்கிய 5 நாட்களில் 10 கோடி பயனர்கள் இணைந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் வாயிலாக ட்விட்டர் போன்ற த்ரெட்ஸ் என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

டெக் ஜாம்பவானான மெட்டா, ட்விட்டருக்கு போட்டியா த்ரெட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமின் கணக்கு அமைப்பை அடிப்படையாகக் கொண்ட செயலி, பயனர்கள் உரை புதுப்பிப்புகளைப் பகிரவும், இணைப்புகளை இடுகையிடவும், பதில் அல்லது செய்திகளைப் புகாரளிக்கவும் மற்றும் பொது உரையாடல்களில் பங்கேற்கவும் அனுமதிக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை வாங்கிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை செய்துவருகிறார். இதனால் ட்விட்டர் பயனர்கள் கோபம் அடைந்துள்ளனர். இந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்த மெட்டா, இன்ஸ்டாகிராம் வாயிலாக ’Threads’ எனும் தளத்தை உருவாக்கி உள்ளது. இது கடந்த 5 நாட்களுக்கு முன்பு வெளியானது.

முன்பெல்லாம் ஒரு செயலி வெளியானால் அதை பலரும் பயன்படுத்தி அதிகம் பேசப்பட்ட பின்னரே அதிகம் பேர் பயன்படுத்த தொடங்குவர். ஆனால் த்ரெட்ஸ் வெளிவந்த 5 நாட்களிலேயே இதில் 10 கோடி பயனர்கள் இணைந்துள்ளனர். த்ரெட்ஸ் ஆப்பை பற்றிய புரிதல் வருவதற்கு முன்பே பலரும் இதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com