ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் போராட்டம்!

ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் போராட்டம்!

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் காவல் துறையினர் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற் காரணத்துக்காக மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்து தாக்கியதில், அப்பெண் கோமா நிலைக்கு சென்று, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராகவும், ஹிஜாப் சட்டத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

-இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், '7 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 7 வயதில் இருந்து நாங்கள் எங்களது முடியை மறைக்கவில்லை என்றால் பள்ளிக்கு செல்ல முடியாது, வேலையும் கிடைக்காது. இந்த பாலின வெறி ஆட்சியால் நாங்கள் சோர்வடைகிறோம்.

- எஇவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பென்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடும் நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com