பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது!

தாலிபான்கள் அதிரடி உத்தரவு!
பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது!

இனி ஆப்கானிஸ்தானில் பெண்கள் அனைவரும் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது என்ற புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைந்ததில் இருந்தே தொடர்ந்து பெண் உரிமைகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்த நாட்டில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

தலிபான்கள் ஆட்சியில் முன்பு இருந்தபோது விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக அளவுக்கதிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது உலக நாடுகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தாலிபான் மற்றொரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி அந்நாட்டில் பெண்கள் அனைவரும் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக்கூடாது என தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக அந்நாட்டின் பால்க் மாகாணத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. மாகாணத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் ஆண் மருத்துவர்களை பார்த்து சிகிச்சை பெற அனுமதி இல்லை. பெண் மருத்துவர்களிடம் மட்டுமே பெண்கள் சிகிச்சை பெற வேண்டும்.

இதை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும் என தாலிபான் அரசின் பொது விவகாரங்கள் மற்றும் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

இந்த புதிய உத்தரவால் சர்வதேச நாடுகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தாலிபான் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே அங்குள்ள பெண்களின் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்று தாலிபான் கூறிய நிலையில், அதற்கு தலைகீழாக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தலிபான்கள் ஆட்சியின் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் நேடா முகமது நதீம் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ மறு அறிவிப்பு வரும் வரை பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com