உலக உணவுப் பொருட்களின் விலைகள் இன்னும் அதிகமாக உள்ளன, ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட, அதாவது அப்போது ரஷ்யா விவசாய சக்தி மையமான உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் மின்னல் விரைவுடன் மாதாந்திர சாதனையாக அதிகரித்திருந்த விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது ஐந்தில் ஒரு பங்கு விலை குறைந்துள்ளது என வெள்ளியன்று ஐ நா உகந்த தரவுகளுடன் காட்டியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 12 வது தொடர்ச்சியான மாதாந்திர வீழ்ச்சிக்குப் பிறகு விலைகள் 20.5 சதவீதம் குறைந்துள்ளதாக ஐ நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.
ஆனால் ஒரு கூடை உணவுப் பொருட்களின் சர்வதேச விலையில் மாதாந்திர மாற்றங்களைக் கண்காணித்து FAO அதன் சமீபத்திய தரவுகளை வெளியிடும்போது, குறிப்பாக இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் வளரும் நாடுகளுக்கு உணவு விலை இப்போதும் உயர்ந்ததாகவே இருப்பதாக ஐ நா கூறியது.
FAO தரநிலை விலைகளின் வீழ்ச்சியானது "உலகம் முழுவதிலும் நிலவும் தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய்களுக்கான வீழ்ச்சியால் உந்தப்பட்டது" என்று கூறியதுடன், உணவுப் பொருள் விலை உயர்வில் ஏராளாமான விநியோகங்களின் கலவை, குறைந்த இறக்குமதி தேவை மற்றும் கருங்கடல் தானிய முன்முயற்சியின் விரிவாக்கம் உள்ளிட்ட காரணிகளும் கூட வீழ்ச்சியில் முக்கியா பங்களித்தது.என ஐ நா தெரிவித்தது.
துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு தீர்மானமான ஒரு ஒப்பந்தமானது, கருங்கடலில் ஒரு பாதுகாப்பான நடைபாதை வழியாக தானியங்களை ஏற்றுமதி செய்ய உலகின் தலைசிறந்த தானிய உற்பத்தியாளர்களில் ஒன்றான உக்ரைனை அனுமதிக்கிறது.
பிப்ரவரி 2022 இல் ரஷ்ய படையெடுப்பு உக்ரைனின் 20 மில்லியன் டன் தானியங்களை துறைமுகத்தில் தடுத்த பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
FAO குறியீடு சராசரியாக 126.9 புள்ளிகள், பிப்ரவரி இறுதியில் இருந்து இது 2.1 சதவீதம் குறைந்து, மார்ச் 2022ல் இருந்து மேலும் 20.5 சதவீதம் குறைந்துள்ளது.
சர்வதேச கோதுமை விலைகள் 7.1 சதவிகிதம் சரிந்ததால், குறிப்பாக வலுவான ஆஸ்திரேலிய உற்பத்தி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மாநிலங்களில் மேம்பட்ட பயிர் நிலைமைகள் மற்றும் உயர் ரஷ்ய விநியோகம் மற்றும் "உக்ரேனிலிருந்து அதன் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து நடந்து வரும் ஏற்றுமதிகள்" ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு உதவியது.
பிரேசிலிய அறுவடையில் உலக மக்காச்சோளத்தின் விலை 4.6 சதவீதம் குறைந்துள்ளது என்று FAO தெரிவித்துள்ளது.
இருப்பினும், FAO தலைமைப் பொருளாதார நிபுணர் மாக்சிமோ டோரெரோ, "உள்நாட்டுச் சந்தைகளில் விலைகள் மிக அதிகமாக உள்ளதோடு தொடர்ந்து அதிகரித்தும் வருகின்றன, இந்தக் காரணிகள் உணவுப் பாதுகாப்பிற்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.