நிறுவனத்தின் ஊழியர்களில் 20%  பணிநீக்கம் செய்யத் தயாராகிய யாஹூ !

நிறுவனத்தின் ஊழியர்களில் 20% பணிநீக்கம் செய்யத் தயாராகிய யாஹூ !

உலகம் முழுவதும் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் வேளையில் பிரபல நிறுவனங்களைத் தாண்டி தற்போது ரெசிஷன் அச்சம் பிற துறைகளையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. ரெசிஷன் அச்சம் குறிப்பாக டெக்னாலஜி துறையில் அதிகப்படியாக இருக்கும் வேளையில் பெரிய நிறுவனங்களே தடுமாற்றும் நிலையில் யாஹூ அடுத்த ஒரு வாரத்தில் மட்டும் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வரும் நிலையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களிடையே கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

யாஹூ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்தாலும் கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை இண்டர்நெட் சேவை உலகில் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் யாஹூ நிறுவனம் வெற்றி அடையமுடியாமல் தவிக்கிறது.

யாஹூ நிறுவனத்தில் விளம்பர தொழில்நுட்பப் பிரிவில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அதன் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 20% க்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக யாஹூ நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தப் பணிநீக்கம் 2023 ஆண்டு இறுதிக்குள் முடிக்க உள்ள நிலையில், தற்போது யாஹூ கிட்டத்தட்ட 50% விளம்பர தொழில்நுட்ப ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் இந்த வாரம் கிட்டத்தட்ட 1,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்றும் யாஹூ அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டாலர் தொகைக்கு யாஹூ நிறுவனத்தைத் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் வாங்கியதால், இதன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்தப் பணிநீக்கம் மூலம் யாஹூ நிறுவனத்தின் வர்த்தகக் கவனம் சீராகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com