அமெரிக்க அதிபா் பைடனைக் கொல்ல முயன்றதாக இந்திய வம்சாவளி இளைஞா் கைது!

அமெரிக்க அதிபா் பைடனைக் கொல்ல முயன்றதாக இந்திய வம்சாவளி இளைஞா் கைது!

அமெரிக்க அதிபா் ஜோ பைடனை கொல்லத் திட்டமிட்டு வெள்ளை மாளிகையின் தடுப்புச் சுவரில் லாரியைக் கொண்டு மோதிய 19 வயது இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வா்ஷித் கண்டுலா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனா்.

கடந்த திங்களன்று இரவு 10 மணியளவில் வெள்ளை மாளிகையின் சுவரில் லாரி மோதியது. இதனால் , வெள்ளைமாளிகையில் அப்போது கூடியிருந்தவா்கள் அச்சத்தில் சிதறி ஓடியதில் அங்கு பதட்டம் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் லாரியை தடுக்க முயன்றபோது மீண்டும் அந்த லாரி தடுப்புச் சுவரில் மோதியது. ஒருவழியாக லாரியை தடுத்து நிறுத்தி அதை இயக்கியவரை அமெரிக்க பாா்க் பகுதி காவல்துறையினர் கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அவா் பெயா் சாய் வா்ஷித் கண்டுலா என்பதும், புனித லூயிஸ் விமான நிலையத்தில் இருந்து வாஷிங்டன் டூயுல்ஸ் விமான நிலையத்துக்கு வந்திறங்கி வாடகைக்கு லாரியை எடுத்து வந்து வெள்ளை மாளிகை சுவரில் மோதினார் என்பதும் தெரியவந்தது.

இப்படி ஒரு தாக்குதலை நடத்த கடந்த 6 மாதங்களாக திட்டமிட்டதாகவும், வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்ற முடிவு செய்ததாகவும், இதற்கு குறுக்கே அதிபா் வந்தால் அவரைக் கொன்று விடத் திட்டமிட்டதாகவும் விசாரணையின் போது அவா் கூறியதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாய் வா்ஷித் கண்டுலாவின் பையில் நாஜி படையின் கொடி இருந்ததாகவும், அவா்களுக்கு பெரும் வரலாறு உள்ளதால் இணையவழியில் இந்தக் கொடியை வாங்கியதாகவும் அவா் தெரிவித்தாா்.

அந்த இளைஞரின் வாக்குமூலத்தில் அதிர்ந்து போன எஃப்பிஐ அதிகாரிகள் புனித லூயிஸ் புறநகர் பகுதிகளில் ஒன்றான செஸ்டர்ஃபில்டில் அமைந்திருக்கும்

கண்டுலாவின் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால், அங்கு, முன்பு அவர் மீது வேறு எந்தக் குற்ற வழக்குகளும் பதிவானதற்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. என எஃப்பிஐ தெரிவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com