இந்தியாவில் யூடியூப் செய்த சாதனை!

இந்தியாவில் யூடியூப் செய்த சாதனை!

பெரும்பாலான இளைஞர்கள் இந்தியாவில் நாள் தோறும் வேலை செய்துவிட்டு கலைத்துப் போய் வீட்டிற்கு செல்கிறார்கள். அவர்களுக்கு அந்த நேரத்தில் ரிலாக்ஸ் செய்ய உதவியாக இருப்பது youtube மட்டுமே. சொல்லப்போனால் யூடியூப்பையும் இந்தியர்களையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். 

250 கோடிக்கு அதிகமான யூடியூப் பயனர்கள் உலகெங்கிலும் இருந்து வருகின்றனர். யூட்யூபில் கோடிக்கணக்கான உள்ளடக்கங்கள் நாள்தோறும் பதிவேற்றப்பட்டு வருகிறது. நீங்கள் சமைக்கவோ, படம் வரையவோ, அல்லது சுவையான மீன் குழம்பு வைக்கவோ ஆசைப்பட்டால், யூட்யூபில் சென்று உங்களுக்கு வேண்டியதை உள்ளீடு செய்தால் போதும், அது சார்ந்த காணொளிகளை உங்களுக்குக் காட்டிவிடும். உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த காணொளியை பதிவேற்றிய நபரை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ச்சியாக அவர்கள் பதிவிடும் காணொளிகளை கண்டு ரசிக்கலாம். 

இப்படி சாதாரணமாக தொடங்கி கணிதம், அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், சினிமா என அனைத்து விதமான காணொளிகளும் you tube-ல் நமக்கு காணக்கிடைக்கிறது. இந்த காரணத்தினாலேயே நாளுக்கு நாள் யூடியூப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனலாம். முன்பெல்லாம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட you tube தற்போது லட்சக்கணக்கான யூடியூபர்களை உருவாக்கிவிட்டு அவர்களுக்கு சம்பளமும் வழங்கி முதலாளியாக மாற்றியுள்ளது. உங்களிடம் ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால் போதும் நீங்களும் ஒரு யூட்யூப் சேனல் தொடங்கி லட்சங்களில் பணம் சம்பாதிக்கலாம். 

இதற்கு முதலீடு எதுவும் தேவையில்லை உங்களுக்கு திறமை இருந்தால் போதும் தொடர்ச்சியாக காணொளி பதிவேற்றினால் உங்களுக்கான சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரித்து நீங்களும் பணம் ஈட்ட அது வழி வகுக்கும். இப்படி பல வழிகளில் உதவியாக இருக்கும் யூடியூப் இந்தியாவில் பல முன்னணி செய்தி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, இணையத்தில் செய்திகளை படிக்கும் மக்களை தன் பக்கம் அதிகம் ஈர்த்துள்ளது. 

இந்தியாவில் டிஜிட்டல் செய்திகளை அதிகம் படிக்கும் முதல் தளமாக யூடியூப் மாறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள தெலுங்கு, தமிழ், கன்னடம், பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழியில் இணைய வழி செய்திகளை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். இதில் 93 சதவீதம் பேர் தங்களுக்கு தேவையான செய்திகளை யூடியூபில் பார்த்து அறிந்து கொள்கின்றனர் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதில் குறிப்பாக மக்கள் குற்றம், பொழுதுபோக்கு, தேசிய மற்றும் மாநில செய்திகளில் அதிக கவனம் செலுத்து கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

மேலும் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்கள் வழியாகவும் பெரும்பாலான செய்திகள் பகிரப்பட்டு மக்களால் படிக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com