யூடியூபின் புதிய கொள்கை. ஸ்மார்ட் டி வி பயனர்கள் அதிருப்தி.

யூடியூபின் புதிய கொள்கை. ஸ்மார்ட் டி வி பயனர்கள் அதிருப்தி.

ஸ்மார்ட் டிவியில் You tube பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள். இனி ஸ்மார்ட் டிவியில் you tube பார்க்கும்போது வரும் 30 நொடி விளம்பரங்களை ஸ்கிப் செய்ய முடியாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

தற்போது பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி பிராண்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதில் குறிப்பாக Netflix, Amazon prime, Hot star, You tube போன்ற செயலிகளையே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும் you tube-ஐ தான் மக்கள் அதிகம் பார்ப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போதுவரை யூடியூப் வீடியோக்களை பார்க்கும்போது, காணொளியின் கண்டன்ட்டைப் பொறுத்து ஸ்கிப் பட்டன் அடுத்த 5 அல்லது 15 வினாடி விளம்பரங்களுக்குப் பிறகு காண்பிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு இனி ஸ்மார்ட் டிவியில் 30 வினாடி நான் ஸ்டாப் விளம்பரங்களைக் காண்பிக்க உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

இந்த புதிய விளம்பரக் கொள்கை விரைவாக அமலுக்கு வரவிருக்கும் நிலையில், தொடக்கத்தில் அமெரிக்காவில் இது முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால் இது மற்ற நாடுகளில் எப்போது அமலுக்கு வரும் என்பது தெரியவில்லை. இந்த புதிய விளம்பரக் கொள்கை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், எத்தனை பேர் youtube-ஐ தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை. 

தற்போது இந்தியாவில் 30 வினாடி விளம்பரங்கள் காட்டப்படவில்லை என்றாலும், 15 வினாடி விளம்பரங்களை கட்டாயம் பார்த்து வருகிறோம். பல நேரங்களில் இது எரிச்சலூட்டும் வகையில் இருந்தாலும், அதை தவிர்ப்பதற்கு youtube பிரீமியம் சந்தாதாரராக மாறினால் மட்டுமே முடியும். அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கான youtube பிரீமியம் சந்தாவின் விலை, 11.9 டாலர்கள். இந்தியாவின் இதன் மாத சந்தா விலை 129 ரூபாயாகும். இதை ஒருவர் செலுத்தி சந்தாதாரராக மாறினால், யூட்யூபில் எந்த விளம்பரங்களும் இன்றி வீடியோக்களைப் பார்க்கலாம். 

அதேபோல youtube-ல் 250 கோடிக்கு அதிகமான பயனர்கள் இருக்கின்றனர். தினசரி லட்சக்கணக்கான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் எதைத் தேடினாலும் அதற்கான காணொளியை யாரோ ஒருவர் youtube-ல் பதிவிட்டிருப்பார். நீங்கள் மீன் குழம்பு வைக்க வேண்டும் என்றாலும் சரி, மிக்ஸி ரிப்பேர் செய்ய வேண்டும் என்றாலும் சரி, யூட்யூபில் பார்த்து எதுவாக இருந்தாலும் கற்றுக் கொள்ளலாம். 

என்னதான் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் யூடியூப் இருந்தாலும், அவர்களின் புதிய விளம்பரக் கொள்கை ஸ்மார்ட் டிவி பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com