Google-க்குப் போட்டியாகக் களமிறங்கும் Zoom!
உலகம் முழுவதும் கொரோனா லாக்டவுன் சமயத்தில் அலுவலக ரீதியான கலந்தாய்வு கூட்டங்கள் மற்றும் ஆலோசனை கூட்டங்களை பல நிறுவனங்களும் ஜூம் செயலி மூலம் நடத்தியது. இந்நிலையில் கூகுள் நிறூவனத்துக்குப் போட்டியாக ஜூம் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வீடியோ கான்பிரன்சிங் சேவை நிறுவனமான ஜூம், தற்போது உலகிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் போட்டி போட தயாராகியுள்ளது. –
-இதுகுறித்து ‘தி இன்ஃபர்மேஷன்’ அறிக்கையில் தெரிவித்ததாவது;
கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலைப் போலவே, ஜூம் நிறுவனமும் Zmail என்ற மின்னஞ்சல் சேவையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் Zcal எனப்படும் காலண்டர் ஆப்-யையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள வருடாந்திர Zoomtopia மாநாட்டில் இந்த இரண்டு புதிய சேவைகளையும் ஜூம் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.