அசாம் கொட்டித் தீர்த்த கனமழை; மீட்புப் பணிகள் தீவிரம்!

அசாம் கொட்டித் தீர்த்த கனமழை; மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மற்றும் அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் நேர்றூ ஏற்பட்ட மிக கனமழையால் அசாம் வெள்ளக் காடாகியுள்ளது. 

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.  அவர்கள் தெரிவித்ததாவது;

அசாமில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைவழி போக்குவரத்து அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,400 பயணிகளை உள்ளடக்கிய 2 ரயில்கள் வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நின்றன

அதிலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 119 பயணிகள் விமானப்படை விமானம் மூலம் சில்சார் அனுப்பப்பட்டு உள்ளனர்ரயில் நிலையம் முழ்வதும் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com