உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக துறைமுகமாக சீனா அதிகாரப்பூர்வமாக துவக்கி உள்ளது.இந்தத் திட்டம் உலகின் அனைவரையும் கவர்ந்துள்ளது. தென் சீனா கடல் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஹைனான் தீவு. சீனாவின் பிரதான நிலப்பரப்பான குவாங் டவுன் மாகாணத்தில் இருந்து கிவ் ஷோ நீரினை வாயிலாக இது பிரிக்கப்பட்டுள்ளது
இது வியட்நாமுக்கு கிழக்கிலும் பிலிப்பைன்ஸ்க்கு மேற்கிலும் அமைந்துள்ளது. மொத்தம் 37,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது.இந்தத் தீவு தைவன் நாட்டு பரப்பளவுக்கு சமமானது. சிங்கப்பூரை விட 50 மடங்கு பெரியது. இதை உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமாக அதிகாரப்பூர்வமாக சீனா அறிவித்துள்ளது. இதன் படி முழு தீவும் இப்போது ஒரு தனி சுங்கமண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் பிற பகுதிகளில் இருக்கும் சட்ட திட்டங்களும் இங்குள்ள சட்ட திட்டங்களுக்கும் வித்தியாசம் இருக்கும்
இதன்படி வெளிநாடுகளில் இருந்து ஹெனான் தீவுக்குள் வரும் இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் உட்பட 74 சதவீத பொருட்களுக்கு எந்த வித இறக்குமதி வரி கிடையாது. இதற்கு முன் 21% வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வரி விலக்கு காரணமாக iphone மொபைல் போன் விலை மற்ற இடங்களை காட்டிலும் 8300 வரை குறைவாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து ஒரு பொருளை அனைவருக்கும் இறக்குமதி செய்து அங்குள்ள தொழிற்சாலைகளில் அதற்கு 30 சதவீதம் மதிப்பு கூட்டுதல் செய்தால் அப்பொருளை சீனாவுக்கு கொண்டு செல்லும் போது சுங்கவரி எதுவும் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நிறுவனங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கு மட்டும் இந்த தீவை பயன்படுத்தாமல் அங்கு தொழிற்சாலைகள் நிறுவவும் சீனா ஊக்குவித்து வருகிறது.
இங்கு ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு 15 சதவீதம் மட்டுமே இருக்கும் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் பிற பகுதிகளில் இந்த வரி விதிப்பு 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரியும் திறமையான பணியாளர்களுக்கு வருமான வரி விதிப்பு 15 சதவீதம் மட்டுமே இருக்கும். இந்த வரி விதிப்பு பிற பகுதிகளில் 45% ஆக உள்ளது. இந்தத் திட்டம் துவங்கிய முதல் நாளிலேயே ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் சீமென்ஸ் எனர்ஜி நிறுவனம் ஹெனான் தீவில் தனது நிறுவனத்தை துவக்கி உள்ளது.
ஹெனான்கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.31 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. 176 நாடுகளைச் சார்ந்த 8 ஆயரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே இங்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் 22 தடையற்ற வர்த்தக மண்டலங்கள் இருந்தாலும் ஹெனான் தீவு தனித்துவம் பெறுகிறது.
இதுவரை கடற்கரை மற்றும் ஓய்வு விடுதிகளுக்கு மட்டுமே உலக அளவில் பெயர் பெற்றிருந்த சீனா ஹெனான் தீவு சந்தைக்கான மிக முக்கியமான நுழைவு வாயில்களில் ஒன்றாக மாறும் . அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீன பொருட்கள் மீது வர்த்தக தடைகளை விதித்து வரும் நிலையில் உலகம் முதலீட்டாளர்களை ஈர்க்க சீனா எடுத்துள்ள மிகப்பெரிய ஆயுதம் இந்த திட்டம் என சொல்லப்படுகிறது.
இதன் மூலம் சீனா தடையற்ற வர்த்தக முயற்சியை தொடங்கியுள்ளது.