உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான Airbus Beluga சென்னை வந்தது.

உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான Airbus Beluga சென்னை வந்தது.

லகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் என்ற பெருமைக்குரிய Airbus Beluga விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. 

பார்ப்பதற்கு திமிங்கல வடிவில் இருக்கும் உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான ஏர்பஸ் பெலுகா குஜராத்திலிருந்து தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் இறங்கி எரிபொருள் நிரப்பியது. இந்த ஏர்பஸ் விமானம் தயாரிப்பு நிறுவனம், நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பயணிகள் விமானம் முதல், சரக்கு விமானங்கள் வரை எல்லா விதமான விமானங்களையும் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில்தான் பெரிய அளவிலான ராட்சச பொருட்களை விமானத்தில் ஏற்றி செல்வதற்கு வசதியாக, பார்ப்பதற்கு திமிங்கலம் போலவே இருக்கும் சூப்பர் ட்ரான்ஸ்போர்ட்டர் பெலுகா என்ற சரக்கு விமானத்தை 1994இல் ஏர்பஸ் நிறுவனம் உருவாக்கி இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தது. பார்ப்பதற்கு ராட்சத தோற்றத்தில் இருக்கும் இந்த விமானத்தில் ஒரே சமயத்தில் 47 டன் எடை கொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்லலாம். 

இந்த விமானம் நேற்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையத்திற்கு இரவு சரியாக 9:30 மணிக்கு வந்தது. இதே போல கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி 2022ல், அகமதாபாத்தில் இருந்து, சென்னை விமான நிலையம் வந்து, எரிபொருள் நிரப்பிக்கொண்டு தாய்லாந்து நாட்டிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான ஏர்பஸ், இதுவரை சென்னை விமான நிலையத்திற்கு இரண்டு முறை வந்து எரிபொருள் நிரப்பிகொண்டு செல்வது நமக்கு பெருமை அளிப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com