

செப்டம்பர் 12, 13 தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மற்றும் நட்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு கடும் உடல் நல குறைவு ஏற்பட்டு, அவசர அவசரமாக சீனாவிற்கு திரும்பியுள்ளார். இந்த நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமருடன் , ஜிங்பிங் வாணிபம், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த இரு தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார். சீன அதிபர் விருந்துக்கு கலந்து கொள்ளாததை இந்திய அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பொதுவாகவே சீன, வட கொரிய அதிபர்கள் அண்டை நாடுகளில் உணவு அருந்துவதில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு வெளியில் உணவு அருந்துவது இல்லை.
ஜிங்பிங், இந்திய பிரதமர் மோடி கொடுத்த விருந்தினில் கலந்து கொள்ளாமல் அவசரமாக நாடு திரும்பியது, அப்போதே பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் சார்பில் முழுமையான சைவ உணவு பட்டியலை அடிப்படையாகக் கொண்டு விருந்து தயாரித்ததனால் தான் , தினசரி அசைவ உணவை வழக்கமாகக் கொண்ட சீன அதிபர் புறக்கணித்து சென்றதாக , காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட , எதிர்க்கட்சியினர் பலரும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட ஷி ஜின்பிங் , திடீர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மயங்கியதாக, சீன ஜனநாயக கட்சியின் தலைவர் வான் ஜுன் ஷி தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில், “பிரிக்ஸ் மாநாட்டின் பங்கேற்ற ஷி ஜிங்பிங் மயங்கி விழுந்ததாக வதந்திகள் பரவின. அதை எடுத்து அவரது மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளித்து, அவரை உடனடியாக சீனா கொண்டு சென்றுள்ளனர். பெய்ஜிங் விமான நிலையத்திற்கு அவரது விமானம் வந்தபின்,
அவரச சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழக்கமாக விமான நிலையத்தில் கொடுக்கப்படும் வரவேற்பு எதுவும் அப்போது கொடுக்கப்பட வில்லை.
அவருக்கு 'இஸ்கிமிக் ஸ்ட்ரோக்' எனப்படும் பக்கவாதம் தாக்கியுள்ளதால், மூளைக்கு ரத்த ஓட்டம் செல்வது தடைபட்டுள்ளது , என்று கூறப்படுகிறது. ஜிங்பிங் மயங்கிய உடனே அவசர சிகிச்சை இந்தியாவில் கொடுத்திருந்தால் அவரது நிலை மோசமாகி இருக்காது. அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் இந்தியாவிற்கு தெரிந்து விடக்கூடாது என்பதால், அவசரமாக சீனா செல்ல வேண்டி இருந்தது. அவரது விமானத்தில் அவசர சிகிச்சைகளுக்கான போதிய வசதிகள் இல்லாததால், அவரது உடல் நிலையை மீட்பதற்கு காலதாமதம் ஆகியது, என்று வான் ஜுன் ஷி குறிப்பிட்டுள்ளார்.
அவரது இன்னொரு பதிவில் , " ஜின்பிங் மருத்துவமனைக்கு செல்லும் போது கோமாவிற்கு சென்று விட்டார். அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை சுற்றி தீவிர ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவே அவர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார், என்பதற்கான சான்று, என்று வான் ஜுன் ஷி தெரிவித்துள்ளார். ஆயினும் ஜிங்பிங் உடல்நிலை குறித்து சீன அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை .