10,000 கிலோ தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் உருவான உல்லாசப்படகு!

10,000 கிலோ தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் உருவான உல்லாசப்படகு!

டகுகள் என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் உல்லாசப் படகை அனைவரும் அரிதாகவே பார்த்திருப்பீர்கள். இதை பெரும்பாலும் வெளிநாட்டவர் தான் வைத்திருப்பார்கள். இந்தியாவில் உல்லாசப் படகு வைத்திருப்போரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. உலகிலேயே மிகவும் விலைமிக்க 6 உல்லாசப் படகுகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம். 

1. ஹிஸ்டரி சுப்ரீம்: இதுதான் உலகிலேயே மெகா லக்சரி உல்லாசப் படகு. இந்த இடத்தை சில பல வருடங்களுக்கு வேறு எந்த படகும் தட்டிச் செல்லாது. சுமார் 40,000 கோடி செலவில் 10,000 கிலோ பிளாட்டினம் மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப் படுகிறது. ஆனால் இந்த படகின் நீளம் வெறும் 100 அடி மட்டுமே.

2. எக்ளிப்ஸ்: இதன் நீளம் 536 அடி என்றாலும் உலகிலேயே மிகப்பெரிய உல்லாசப் படகு என இது சொல்லப்படுகிறது. இதன் விலை வெறும் 12,264 கோடி மட்டுமே. இந்த படகின் சிறப்பம்சமே இதில் அடங்கியுள்ள பாதுகாப்புதான். அனைத்து கண்ணாடிகளும் புல்லட் ப்ரூப் மற்றும் பிரைவேட் பாதுகாப்பு அமைப்பு கொண்டது. 

3. ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் மொனாக்கோ: இதன் மொத்த விலை 100 கோடி டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 8176 கோடிகள். இந்த வரிசையிலேயே வசீகரம் கொண்ட உல்லாசப் படகு இதுதான் எனலாம். அந்த அளவுக்கு, ஒரு நகரம் நீரில் மிதந்தால் எப்படி இருக்குமோ, இந்த படகும் அப்படி காட்சியளிக்கும். உலகில் முதன்முறையாக ஒரு பில்லியன் டாலரில் உருவாக்கப்பட்ட உல்லாசப் படகு இதுதான். 

4. அஸ்ஸாம்: லூர்சன் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த படகு, உலகின் வேகமாக செல்லும் படகாக விளங்குகிறது. இதன் விலை 495 கோடியாகும். இதன் விலைக்கு ஏற்றவாறு 590 அடி நீளத்தில் இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு வேகமாக செல்ல இதில் இரண்டு கேஸ் டர்பைன் இன்ஜினிகளும், இரண்டு டீசல் இன்ஜின்களும் பொருத்தப்பட்டுள்ளது. 

5. டோபஸ்: இதுவும் ஒரு வகையான தனிநபர் உல்லாசப் படகு தான். ஆனால் இந்த படகில் சற்று அதிக நபர்களையும் ஏற்றி செல்ல முடியும். ஏனென்றால் இந்த படகு 482 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை 4209 கோடியாகும். இந்த படகு இரண்டு வெவ்வேறு வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. இந்த படகிலும் நீச்சல் குளம், ஹெலிகாப்டர் பேட், சினிமா ஹால் என அனைத்துமே இடம்பெற்றுள்ளது. 

6. மோட்டார் யாட்ச் ஏ: இந்தப் உல்லாசப் படகின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 3600 கோடி. மொத்தம் 400 அடி நீளத்தில் ப்லோம்+வோஸ் என்ற நிறுவனத்தால் இந்த படகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படகு தனி பயணத்திற்கு மட்டுமே ஏற்றதாக கருதப்படுகிறது. ஏனென்றால், அதிக நபர்களுடன் பயணிக்கும் வகையில் இது உருவாக்கப் படவில்லை. குறிப்பாக, இந்த உல்லாசப் படகின் ஒரு படுக்கையறை, சுமார் 2500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கண்ணாடித் தரை நீச்சல் குளம், டிஸ்கோ ஹால் போன்றவையும் இதில் இருக்கிறது. 

இந்த ஆறு உல்லாசப் படகில் ஏதாவது ஒன்றை நேரில் பார்த்தால் கூட, நீங்கள் உங்கள் வாழ்நாள் பலனை அடைந்துவிட்டீர்கள் எனலாம். குறிப்பாக ஏதாவது ஒன்றில் நீங்கள் பயணம் செய்துவிட்டால், நிச்சயம் நீங்களும் ஓர் அதிர்ஷ்டசாலிதான். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com