நூல் விலை கிலோவுக்கு 20 குறைந்தது. திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

நூல் விலை கிலோவுக்கு 20 குறைந்தது. திருப்பூர் ஆடை  உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

னியன் போன்ற பின்னலாடை ஜவுளிகளுக்கு பெயர் பெற்ற நகரம் திருப்பூர். பின்னலாடைக்குத் தேவையான நூல் விலையின் அடிப்படையில்தான் ஆடைகளின் விற்பனை விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. நூல்களின்  விலையை ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நூற்பாலைகள்  நூலுக்கான விலையை நிர்ணயித்து விலைப்பட்டியல் வெளியிடுவது வழக்கம்.

       அந்த வகையில் புத்தாண்டு முடிந்து நடப்பு ஜனவரி மாதத்திற்கான விலையை நூற்பாலைகள் நேற்று (2-1-23) வெளியிட்டது. அதன்படி நடப்பு மாதத்துக்கான நூல் விலை சராசரி கிலோவுக்கு ரூபாய் 20 குறைந்ததால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த ஜாப் ஒர்க் எனப்படும் சாயமிடுதல், பிரிண்டிங், எம்பிராய்டரி, போன்ற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வரும் நூல் விலை உள்ளிட்ட பிற மூலப் பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு உற்பத்தி யாளர்கள் ஆடைகளின் விலை நிர்ணயம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் நூல் விலை மாற்றம் காரணமாக தொழில் துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் தடுமாற்றம் இருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டில் சில மாதங்களாகவே நூல் விலை கடுமையாக உயர்ந்தது. எனவே, நூல் விலையைக் குறைக்க தொழில் துறையினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

       தற்கிடையே புது பஞ்சு வரவு அதிகரித்ததால் நூல் விலை சரியத் தொடங்கியது. ஆனாலும் கடந்த டிசம்பர் மாதத்திற்கான நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நூற்பாலைகள் அறிவித்திருந்தன. ஆனால்  நடப்பு ஜனவரி மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் நேற்று அறிவித்ததில் ஒரு கிலோ நூலுக்கு சராசரியாக ரூபாய் 20 குறைந்து இருப்பது அறிந்து திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

       உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் மனிதனுக்கு அத்தியாவசியம். நூல் விலை குறைப்பால் உடைகள் மலிவாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் இனி மேலும்  பதிய ஆடைகளை வாங்கி அணிந்து மகிழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com