நேற்று நிர்மல்குமார் ... இன்று திலிப் கண்ணன் ராஜினாமா... என்ன நடக்கிறது தமிழக பிஜேபியில்?

நேற்று நிர்மல்குமார் ... இன்று திலிப் கண்ணன் ராஜினாமா... என்ன நடக்கிறது தமிழக பிஜேபியில்?

தமிழ்நாடு பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேற்று பாஜக ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் விலகிய நிலையில் தற்போது மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகியுள்ளது . தமிழக பிஜேபியில் என்ன நடக்கிறது என பிஜேபிக்காரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

இன்று பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்காக குற்றசாட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டால் அவருக்கு கட்சியில் இருந்து எந்த சட்ட உதவியும் செய்வது இல்லை. சட்ட உதவி செய்பவர்களை, ஏன் உதவி செய்கிறீர்கள் என்று மிரட்டல் தான் வருகிறது எனவும் குற்றசாட்டியுள்ளார். அதில் “இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாடு பாஜகவுக்கு அடுத்த ஷாக் தகவல்கள் .

நேற்று தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தவர் சிடிஆர் நிர்மல் குமார். இவர் நேற்று திடீரென்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நிர்மல் குமார் பதவி விலகலுக்கு முக்கிய காரணம் பாஜக கட்சி கூட்டம் ஒன்றில் அண்ணாமலை நிர்மல் குமாரை தாக்கும் விதமாக பேசியதாக கூறப்படுகின்றது.இதனால் தான் நிர்மல் குமார் கட்சியிலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது. நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகியது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்” என்று குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இது குறித்து பதிலளித்த அண்ணாமலை அவர்கள் பாஜகவில் இருந்து பிரிந்து சென்றிருக்கும் திரு.நிர்மல் குமார் விடுத்திருந்த அறிக்கையைப் படித்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சிப்பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று நாங்கள் நினைத்து கொண்டிருந்த நேரத்தில், அவர் குழப்பத்தில் இருந்திருக்கிறார். அவதூறு பரப்புகிறவர்களை விரைவில் மக்கள் அடையாளம் காண்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com