சபரிமலையில் யோகி பாபு! வைரல் வீடியோ...

சபரிமலையில் யோகி பாபு! வைரல் வீடியோ...

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் 'தர்ம பிரபு', 'கூர்கா', 'மண்டேலா', 'பேய் மாமா' உட்பட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அதில் சில படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன.

காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து டூயட் போட்ட பாடல் செம ஹிட்டானதைத் தொடர்ந்து, சினிமா கேரியரில் யோகி பாபுவை அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் சென்றது.

தனது நடிப்புத் திறமையால் கொஞ்சம்கொஞ்சமாக முன்னுக்கு வந்த நடிகர் யோகி பாபு, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவருவதோடு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் 'ஜவான்' படத்திலும் பணிபுரிந்து வருகிறார்.

சினிமாவில் என்னதான் பிஸியாக இருந்தாலும், யோகி பாபு, கடவுள் மீதும் அதிக பக்தி கொண்டவர். தீவிர முருக பக்தராக அறியப்படும் யோகி பாபு, படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் உள்ள பிரபல கோயில்களுக்கும் சென்று கடவுள்களை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதேபோல் சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யோகிபாபு, இதுசம்பந்தமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார். அதுகுறித்த வீடியோவில், தனது ரசிகர்களுக்கு கைகொடுத்து, சாமியை தரிசிக்க செல்லும்படி கூறுகிறார். தற்போது இதுகுறித்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com