இடைத்தேர்தலில் போட்டிட விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டிட இன்று முதல் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் 23.1.2023 திங்கட் கிழமை முதல் 26.1.2023 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணத் தொகையாக 15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) ரூபாயை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று கொள்ளலாம். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும்” என அறிவித்துள்ளார்.

இந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் தலைமை கழகத்திலிருந்து விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.

முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com