Google Pay-ல் இனி கிரெடிட் கார்ட் பயன்படுத்தியும் பணம் செலுத்தலாம்.

Google Pay-ல் இனி கிரெடிட் கார்ட் பயன்படுத்தியும் பணம் செலுத்தலாம்.

ந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போன் பே, கூகுள் பே, பேடிஎம் என ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூகுள் பே செயலியில் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது எல்லா இடங்களிலும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை இருந்து வருகிறது. இதற்காக பல்வேறு செயலிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். அந்த செயலிகளிலேயே மின்கட்டணம், எரிவாயுக் கட்டணம், ட்ரெயின் டிக்கெட், பஸ் டிக்கெட், திரைப்பட டிக்கெட் போன்றவற்றிற்கான கட்டணத்தை செலுத்த முடியும். இப்படி இருக்கும் சூழலில் கூகுள் பே செயலியில் தற்போது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி UPI பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி Rupay கிரெடிட் கார்டு மூலமாக யுபிஐ பரிவர்த்தனை செய்வதற்கு, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது கூகுள். எனவே ரூபே கிரெடிட் கார்டு வைத்துள்ள பயனர்கள் இனி அவர்களின் கார்டை கூகுள் பே செயலியில் இணைத்து பணம் செலுத்தலாம். குறிப்பாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹெச்டிஎஃப்சி, இந்தியன் வங்கி, கோடக் மகேந்திரா போன்ற வங்கிகள் வழங்கும் ரூபே கிரெடிட் கார்டுகளை கூகுள் பே தற்போது ஆதரிக்கிறது. இத்துடன் மேலும் சில வங்கிகளின் கார்டுகளையும் இனிவரும் காலங்களில் இணைக்க கூகுள் பே திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை கூகுள் பே செயலியில் டெபிட் கார்டைப் பயன்படுத்தியே வங்கிக் கணக்கை இணைத்து வந்த நிலையில், இனி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியும் வங்கியை இணைக்கும் வசதி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. ஆனால் மாஸ்டர் மற்றும் விசா கிரெடிட் கார்டுகளை தற்போது இணைக்க முடியாது. 

ரூபே கிரெடிட் கார்டை கூகுள் பே-ல் எப்படி இணைப்பது?

  1. கூகுள் பே செயலியில் டெபிட் கார்டை இணைப்பது போலவே கிரெடிட் கார்டையும் இணைக்க முடியும். முதலில் கூகுள் பே செயலியைத் திறந்து அதன் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும். 

  2. தில் Setup Payment Method என்பதைத் தேர்வு செய்து, Add Rupay கிரெடிட் கார்டு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். 

  3. தன் பிறகு கிரெடிட் கார்டின் விவரங்களான கிரெடிட் கார்டு எண், அதனுடைய எக்ஸ்பயரி டேட், பின் நம்பர் ஆகியவற்றை உள்ளீடு செய்த பிறகு உங்களுக்கு ஓடிபி அனுப்பப்படும். 

  4. டிபி சரிபார்ப்புக்குப் பிறகு ரூபே கிரெடிட் கார்டு, கூகுல் பே செயலியில் இணைக்கப்படும். 

  5. னி நீங்கள் எங்காவது பணம் செலுத்தும் போது கிரெடிட் கார்டு ஆப்ஷனைத் தேர்வு செய்து எளிதாகப் பணம் செலுத்தலாம். 

இனிவரும் காலங்களில் இந்த அம்சமானது எல்லா இணையப் பணப்பரிவர்த்தனை செயலிகளிலும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com