விஞ்ஞான உலகையே மிரள வைத்த 15 வயது சிறுவன்! நம் வாழ்நாளை அதிகரிக்கப் போகிறாரா?

laurent simons with the Holy Father
laurent simons with the Holy Father
Published on

நம்ப முடியாத மேதை! பெல்ஜியத்தின் 'சின்ன ஐன்ஸ்டீன்': 15 வயதில் குவாண்டம் இயற்பியலில் PhD! அடுத்து அவர் நோக்கம் என்ன தெரியுமா?

இவர் பெல்ஜியத்தின் லாரன்ட் சிமன்ஸ். வெறும் 15 வயதே ஆன மாணவர். சாதாரண பள்ளியை முடிக்கும் முன்னரே, 'சின்ன ஐன்ஸ்டீன்' என பட்டம் பெற்றவர் இவர்.

இவ்வளவு சின்ன வயதிலேயே குவாண்டம் இயற்பியலில் PhD முடித்திருக்கிறார். அன்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் இந்த அரிய சாதனையைச் செய்துள்ளார்.

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் முனைவர் பட்டம் பெற்ற சாதனை இதுதான். கடந்த வாரம்தான் தன் ஆய்வுக்கட்டுரையை வெற்றிகரமாகச் சமர்ப்பித்தார்.

லாரன்டின் ஆராய்ச்சித் தலைப்புகள் அதி தீவிரக் கடினமானவை. 'போஸ் போலரான்ஸ்' போன்ற சிக்கலான துறைகளில் ஆய்வு செய்துள்ளார்.

அதாவது, மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது.

சாதாரண மக்களுக்கு இதை ஒரு வரி விளக்கத்தில் புரிவதுகூட மிகக் கடினம்!இந்தத் தலைப்புகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள்தான் ஆராய்ச்சி செய்வார்கள். அப்படிப்பட்ட விஷயங்களை 15 வயதில் இவர் கரைத்துக் குடித்திருக்கிறார்.

laurent simons and his Phd journey
laurent simons

லாரன்டின் திறமையை ஆசிரியர்கள் மட்டுமின்றி, அறிவியல் உலகமும் அங்கீகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை தர துடித்தன.

ஆனால், இவரது பெற்றோர்கள் அந்தப் பெரிய நிறுவனங்களின் சலுகைகளை நிராகரித்துவிட்டனர். லாரன்டின் இலக்கு அதைவிடப் பிரம்மாண்டமானது.

பேட்டியின்போது அவர் தன் இலக்கைச் சொன்னபோது உலகமே ஆச்சரியப்பட்டது. “நான் சூப்பர் மனிதர்களை (Super-Humans) உருவாக்குவதில் ஈடுபடப் போகிறேன்” என்றார்.

ஆம், மனித வாழ்நாளை உயர்த்துவதுதான் அவரது பிரதான இலக்கு. உயிரியல் ரீதியாக மனிதனை அழியாதவனாக (Immortal) மாற்றுவதே லாரன்டின் கனவு.

இதையும் படியுங்கள்:
2025 இயற்பியலுக்கான நோபல் பரிசு: குவாண்டம் வித்தைகள் இப்போது நம் கையில்..!
laurent simons with the Holy Father

இவருக்கு 8 வயதிலேயே பள்ளிப் படிப்பு முடிந்தது ஒரு தனிச் சாதனை. 2022-ல் வெறும் 18 மாதங்களில் இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தையும் முடித்தார்.

அவரின் IQ அளவு 145 எனப் பதிவாகியுள்ளது. நாம் படிக்கும் தகவல்கள் நமக்கு சில சமயம் மறந்து போகலாம், இவரோ படிக்கின்ற எல்லத் தகவல்களையும் நிரந்தரமாகச் சிப் போல மூளையில் பதிவிறக்குகிறார். அதனால்தான், போசான்கள் மற்றும் கருந்துளைகள் (Black Holes) போன்ற சிக்கல்களை எளிதில் புரிந்துகொண்டார்.

இத்தனை சலுகைகள் வந்தபோதும், தன் வாழ்நாள் இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்கும், இந்தச் 'சின்ன ஐன்ஸ்டீனை' உலகமே பெருமையுடன் பார்க்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com