காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை சாலையில் அள்ளி அள்ளி வீசும் இளைஞர்கள்... எதற்கு தெரியுமா?

காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை சாலையில்  அள்ளி அள்ளி வீசும்  இளைஞர்கள்... எதற்கு தெரியுமா?

சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் காரில் இருந்து ஒருவர் ரூபாய் நோட்டுகளை அள்ளி அள்ளி வீசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் இந்த வீடியோ பதிவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள சாலையில் வேகமாய்ச் செல்லும் கார் ஒன்றில், பின்பக்கத்தில் உள்ள டிக்கியில் அமர்ந்தபடி, நபர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை அள்ளி சாலையில் வீசுகிறார். இந்த காட்சி வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதுகுறித்து குருகிராம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், ” ‘பர்ஸி’ வெப் சீரிஸில் வரும் காட்சியை போன்று அந்த நபர் வீடியோ உருவாக்க முயன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதற்காக, கோல்ப் மைதான சாலையில் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை வீசி வீடியோ உருவாக்க முயன்றிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

’ஃபர்ஸி’ வெப் தொடரின் காட்சியை மறு உருவாக்கம் செய்யும் நோக்கில், காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஷாகித் கபூர், விஜய் சேதுபதி நடித்து அண்மையில் வெளியான வெப் தொடர் ’ஃபர்ஸி’. இத்தொடரில், காரில் சென்றுகொண்டிருக்கும் போது பணத்தை வீசுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை மறு உருவாக்கம் செய்யும் வகையில், ஹரியானா மாநிலம், குருகிராமில் காரில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசினர்.

இதையடுத்து ஹரியானா போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஜோராவர் சிங் கல்சி மற்றும் குர்ப்ரீத் சிங் ஆகிய இரு இளைஞர்கள் தான் காரில் இருந்து ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசியது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த இரு இளைஞர்களையும் கைது செய்த ஹரியானா போலீசார், வீடியோ பதிவு செய்தவர்களை தேடி வருகின்றனர். மேலும், கைதான ஜோராவர் சிங் கல்சி மற்றும் குர்ப்ரீத் சிங் ஆகியோரிடமிருந்து ரூபாய் நோட்டுக்களையும், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com