டிடிஎப் வாசன் கைது.. ஜாமீனில் வெளிவரமுடியாத அளவு வழக்குப்பதிவு!

TTFVasan
TTFVasan
Published on

பிரபல யூடியூப்பர் டிடிஎப் வாசன் பைக் சாகசம் செய்து விபத்துக்குள்ளான நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்ததை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியத்ற்காக அவரை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவரின் வலது கையில் எலும்பு முறிந்து, பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பைக் ரைடர்கள் போடும் கோட்டை போட்டிருந்ததால் நல் வாய்ப்பாக சிறு காயங்களோடு உயிர் தப்பினர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த டிடிஎப் வாசனுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், டிடிஎஃப் வாசன் மீது, பொது மக்களின் உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று காலை காஞ்சிபுரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com