ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம்!

YS SHARMILA
YS SHARMILA

ந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக அம்மாநில முதல்வர் ஒ.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி, ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை நடத்தி வந்த ஷர்மிளா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி தமது கட்சியை கலைத்துவிட்டு தில்லியில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

இதுவரை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்து வந்த கிடுகு ருத்ர ராஜு பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து ஷர்மிளா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவி விலகிய ருத்ர ராஜு காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கான மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற போது, தமது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று கூறியிருந்தார். தமது கட்சி தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறும் என்றும் அது முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கே ஆதாயமாக இருக்கும் என்று காரணம் கூறியிருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஷர்மிளா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, ஷர்மிளாவை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்க உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து ருத்ர ராஜு, தமது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து ஷர்மிளாவை களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தம்மை எங்கு பணி செய்யக் கோரினாலும் அதற்கு தயாராக இருப்பதாகவும், எந்த தொகுதியில் போட்டியிடச் சொன்னாலும் போட்டியிட தயாராக இருப்பதாகவும் ஷர்மளா ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வருகிற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com