ட்ரம்பையே எதிர்த்து பேசிய ஜெலன்ஸ்கி… வார் ரூமாக மாறிய வெள்ளை மாளிகை!

Zelensky Vs trump
Zelensky Vs Trump
Published on

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தம் குறித்தான பேச்சுவார்த்தையின்போது ட்ரம்புக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதுதான் தற்போது உலகமே பேசிக் கொண்டிருக்கிறது.

ரஷ்யா உக்ரைன் போர் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது.

மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் உதவி செய்தும் வருகின்றன.

இப்படியான நிலையில், உக்ரைன் ஆதரவு நாடான அமெரிக்கா சில நாட்கள் முன்னர் ரஷ்யாவிடம் போர் நிறுத்தம் குறித்து பேசியிருக்கிறது. இதன் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை என்பது நடந்தது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து பின் நேரடியாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் போர் நிறுத்த முயற்சிகளை எடுக்க ரஷ்யா மற்றும் அமேரிக்கா இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேசினர்.

இதையும் படியுங்கள்:
சர்ச்சைகள், சாதனைகளை தொடர்ந்து 'சாவா' படத்திற்கு 3 மாநிலங்களின் முக்கிய அறிவிப்பு!
Zelensky Vs trump

முதலில் அமெரிக்க துணை அதிபர், கடந்த நான்கு ஆண்டுகளில் ரஷ்யா உடனான போரை நிறுத்த முயற்சிப்பதாக அமெரிக்கா கூறிவந்தது ஆனால் அப்போதைய அதிபர் பைடனின் சொல்லும் செயலும் வேறுவேறாக இருந்தது.

தற்போது டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு சூழல் மாறியிருக்கிறது அவரது ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் போரை நிறுத்த முயற்சி செய்கிறார் என்று குறிப்பிட்டார்.

அப்போது குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, “ நான் ஒன்று கேட்கிறேன் 2014ம் ஆண்டு ஒபாமா இருந்ததிலிருந்து போர் ஆரம்பித்தது. அதன்பிறகு டிரம்ப், பைடன், தற்போது மீண்டும் டிரம்ப், ஆனால் எங்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

இதில் என்ன ராஜதந்திரம் இருக்கிறது, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை ஒரு சந்தையாக தான் பயன்படுத்தி வருகிறது" என்று குரல் கொடுத்தார்.

இதற்கு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பதிலளித்தார், “ நாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானம் ஏற்படுத்த முயற்சி செய்கிறோம் ஆனால் உங்களின் இந்த பேச்சு மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயமாக உள்ளது.” என்று காரசாரமாக பேசினார்.

இதையும் படியுங்கள்:
சர்ச்சைகள், சாதனைகளை தொடர்ந்து 'சாவா' படத்திற்கு 3 மாநிலங்களின் முக்கிய அறிவிப்பு!
Zelensky Vs trump

அதாவது போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பல உதவிகளை செய்தது. அதற்கு ஈடாக உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதனால் அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே உக்ரைன் மாட்டிக்கொண்டு தவிக்கிறது என்றே கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com