உலகில் பல நாடுகள் இந்தாண்டு மோசமான வெயிலினால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதில் சில நாடுகள் தண்ணீர் இல்லாமல் வறட்சியை நோக்கியும் நகர்கின்றன. ஆனால் தென்னாப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் இன்னும் வறட்சித் தீவிரமாகும் என்றும் பேரழவினால் பட்டினி பலிகள் கூட ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து ஜிம்பாப்வே நாட்டின் பிரதமர் உதவி கேட்டு அறிவிப்பு விடுத்திருக்கிறார்.
பெங்களூருவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் திண்டாடி வரும் நிலையில் சுத்தகரித்த குடிநீரைப் பயன்படுத்தாததால் காலரா போன்ற நோய்களும் பரவ ஆரம்பிக்கின்றன. வறட்சி வந்தால் உணவு பஞ்சம், தண்ணீர் பஞ்சம், நோய்கள் என அடுக்கடுக்காக வந்து மக்களை சித்ரவதை செய்யும்.
இதனையடுத்துதான் தற்போது ஜிம்பாப்வே நாட்டிலும் வறட்சி நிலவி வருகிறது. பொதுவாக ஒரு நாடு பொருளாதார ரீதியாக மேம்பட்டுவிட்டாலே அதுதான் வளமான நாடு என்று கூறுகின்றனர். இந்த பொருளாதார மேம்பாட்டிற்காக பல தொழிற்சாலைகள் ஆரம்பித்து, அதன் பக்க விளைவுகளை கருத்தில் கொள்ள மறந்துவிடுகின்றனர் என்று சூழலியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுத் தொடர்பாக ஆய்வாளர்கள் என்ன கூறுகின்றனர் என்றால், பொருளாதார வளர்ச்சிக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் கரியமில வாயுக்கள் பூமியை மென்மேலும் சூடாக்குகிறது. இப்படி பூமி சூடாகினால் இயற்கைப் பேரிடர்கள், தொற்றுநோய்கள் ஆகியவை வந்து மக்களை காவு வாங்குகின்றது.
பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய பகுதிகளிலிருந்து ஆண்டுதோறும் சூடான காற்று மேலெழும். இதன் எதிர்வினையாக அமெரிக்கா பகுதியிலிருந்து குளிர்ச்சியான காற்று மேலெழும். இவை இரண்டும் மோதும்போதுதான் இயற்கை சமநிலையாகவும் இயல்பாகவும் இருக்கும். இதனால் மட்டுமே உலகில் உள்ள அனைத்து நிலப்பரப்பிலும் மழை பொழிகிறது. ஒருவேளை இந்த இரண்டு காற்றுகளில் ஏதெனும் ஒன்று மேலழாவிட்டால் வானிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனைதான் எல் நினோ என்று கூறுவார்கள்.
சமீபத்தில் கூட இந்த பாதிப்பு லண்டனிலும் பாகிஸ்தானிலும் காணப்பட்டது. அதாவது லண்டனில் வரலாறு காணாத அளவு வெப்பமும் பாகிஸ்தானில் வரலாறு காணாத மழையும் ஏற்பட்டது. இந்த மழையால் வெள்ளம் வந்து அதிகளவில் உயிர்சேதமும் ஏற்பட்டது.
இந்தநிலையில்தான் லண்டன் போல் இந்தாண்டு ஜிம்பாப்வே அதில் மாட்டிருக்கிறது. எல் நினோவால் தான் இந்த வறட்சி காணப்படுகிறது. வழக்கமாகப் பொழியும் 80 சதவீத மழைக் கூட இல்லை. இதனால் பயிர்கள் அனைத்தும் வாடிவிட்டன. இந்தநிலையில்தான் ஜிம்பாப்வே 16 ஆயிரம் கோடி கடன் கேட்டிருக்கிறது. இப்போது இருக்கும் சூழல் வெறும் தொடக்கம்தான் என்றும், இந்த கடும் வறட்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுத்தொடர்பாக ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் மங்கக்வா பேசுகையில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவை உறுதி செய்வது மட்டுமே இப்போதைய நோக்கம். பட்டினியால் ஒருவர்கூட உயிரிழக்கக் கூடாது.” என்று கூறினார்.
ஜிம்பாப்வே நாட்டில் 60 சதவீத கிராமங்களில் சுமார் 1.5 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களை பாதுகாக்க ஜிம்பாப்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.