நிறுவனத்தின் தலைவரையே தூக்கிய zoom !

நிறுவனத்தின் தலைவரையே தூக்கிய zoom !
Published on

கடந்த சில நாட்களுக்கு முன்பு 1, 300 பணியாளர்களை பணி நீக்கம் செய்த ஜூம் (Zoom) நிறுவனம், இம்முறை அதன் தலைவரையே நீக்கியுள்ளது. ஜூம் நிறுவனத்தின் தலைவர் கிரெக் டோம்ப் (Greg Tomb), திடீரென அவரது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

கிரெக் டோம்ப், 2022ஆம் ஆண்டு ஜூம் நிறுவனத்தின் தலைவராகப் பதவியேற்றார் என்றும் தற்போது எவ்விதக் காரணங்களும் இன்றி அவரின் வேலை ஒப்பந்தம் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளது.

கொரோனா முடக்க காலத்தின்போது, “வீட்டிலிருந்து வேலை” work from home என்னும் நடைமுறை ஏற்பட்டது. அப்போது தான் ஜூம் மிகவும் பிரபலமாகி இருந்தது.

எனினும், தற்போது வீட்டிலிருந்து வேலை நடைமுறை மாறி, எல்லோரும் அலுவலகங்களுக்குத் திரும்பியுள்ளமையால், பயனாளர்களை தக்கவைத்துக்கொள்வதில் ஜூம் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் கடந்த மாதம் 1,300 பேரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறைந்து வரும் தேவையை சமாளிக்க நிறுவனம் சமீபத்தில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. பிப்ரவரி 7 அன்று சுமார் 15 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

இந்த நிறுவனத்தின் ஆண்டு சம்பளத்தில் 98 சதவீதத்தை குறைப்பதாகவும், தனது நிர்வாக போனஸை கைவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீடியோ கான்ஃபரன்சிங் தளமான ஜூம், எவ்வித காரணமுமின்றி அதன் தலைவர் கிரெக் டோம்ப்-ஐப் பணி நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபரும் முன்னாள் கூகுள் ஊழியருமான கிரெக் டோம்ப், 2022 ஜூனில் பதவியேற்றார். அதன் பிறகு நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கிரெக் டோம்ப் தீவிரமாக பணியாற்றிய நிலையில், தற்போது திடீரென அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். வேறு தலைவரை அப்பதவியில் அமர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என்று ஜூம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com