தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய விலை நிலவரம்!

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய விலை நிலவரம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. இம்மாத தொடக்கத்திலிருந்து தங்கம் விலையில் பெரிய மாறுதல்கள் எதுவும் இருக்கவில்லை. குறிப்பாக, கடந்த 2 நாட்களாக தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.4,434-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.35,472-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்திருப்பது சாமானிய மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,466க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.35,728க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,700க்கும் விற்பனையாகிறது.

logo
Kalki Online
kalkionline.com