துபாய் எக்ஸ்போ கண்காட்சி: நடிகர் ரன்வீர் சிங்குடன் நடனமாடிய மத்திய அமைச்சர்!

துபாய் எக்ஸ்போ கண்காட்சி: நடிகர் ரன்வீர் சிங்குடன் நடனமாடிய மத்திய அமைச்சர்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

துபாயில் 192 நாடுகள் பங்குபெறும் சர்வதேச தொழிற் கண்காட்சியான எக்ஸ்போ-2020 நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் இந்திய அரசு சார்பான அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த உலக வணிக கண்காட்சியில் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில் நடிகர் ரன்வீர் சிங்குடன் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நடனமாடியது பெரும் பரபரப்பிக் கிளப்பியுள்ளது.

இந்த கருத்தரங்கின்போது நடிகர் ரன்வீர் சிங் நடனமாடினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்ரை தன்னுடன் சேர்ந்து நடனமாடும்படி அழைத்தார்.

உடனடியாக மத்திய அமைச்சரும் எழுந்து சென்று ரன்வீர் சிங்குடன் சேர்ந்து சிறிது நேரம் உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com